
ஊரடங்கு காரணமாக சாலையில் நடந்து சென்றதால் பாதங்கள் கிழிந்ததாக ஒரு மூதாட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
கிழிந்த தன்னுடைய பாதங்களைக் காட்டும் மூதாட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஆட்சியாளர்களே கொஞ்சமாவது இரக்கம் வரவில்லையா…. நடந்து நடந்து கால்கள் பிய்ந்தது தான் மிச்சம். . வீடு வரவில்லை…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Abdul Rahman என்பவர் மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா ஊரடங்கு காலத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்ததால் தங்கள் சொந்த ஊருக்கு கால்நடையாக நடந்து செல்லும் வேதனை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படி நடந்து செல்லும் பலரின் உருக்கமான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றுடன் சில போலியான படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபோன்ற தவறான தகவல்களை அவ்வப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் ஆராய்ந்து ஆதாரங்களுடன் தவறானது என்று செய்தி வெளியிட்டு வருகிறோம்.
கொரோனா ஊரடங்கு; இந்த வயதான நபர் நடந்தே சொந்த ஊர் செல்கிறாரா? |
சூரத்தில் இருந்து நடந்து சென்ற குடும்பம் தற்கொலை செய்துகொண்டதா? |
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக சென்றார் என்று நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனாலும், நடந்து நடந்து கால்கள் பிய்ந்ததுதான் மிச்சம், வீடு வரவில்லை என்று குறிப்பிடுவதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர் என மறைமுகமாக குறிப்பிடுகின்றனர்.
இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடியபோது 2018ம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் விவசாயிகள் மும்பையை நோக்கி மிகப்பெரிய பேரணி நடத்தினர். அதில் பங்கேற்றவர் என்று பி.பி.சி உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் நமக்கு கிடைத்தன.
இதன் மூலம், பழைய படத்தை எடுத்து ஊரடங்கு காலத்தில் சாலையில் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர் எனக் கூறி பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை, எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுவோம்.

Title:கொரோனா ஊரடங்கு; சாலையில் நடந்து சென்றதால் காயமடைந்தவரா இந்த பெண்?
Fact Check By: Chendur PandianResult: False

இஸ்லாத்திற்கும் இஸ்லாமியருக்கு எதிராக எத்தனையோ தவறான
பதிவுகள் வந்து கொண்டிருக்கிறது அது பற்றி தங்களது கருத்து நீங்கள் முதலில் குர்ஆனை ஆராய்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் பைபிளையும் பாருங்கள் பகவத் கீதையும் பாருங்கள்
இஸ்லாம் வந்து எந்த மதத்தையும் தூற்றவும் பிற மதத்தை கேவலப் படுத்தவும் ஒரு போதும் செய்யாது இஸ்லாமியர்களும் ஒருபோதும் செய்யமாட்டார்கள்
இஸ்லாமியர்களும் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்