
‘’இந்தி தெரியாவிட்டால் பாகிஸ்தான் போய்விடுங்கள்,’’ என்று பாஜக தமிழ்நாடு இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் கூறியதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

செப்டம்பர் 8, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், Narathar Media என்ற லோகோவில் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் – வினோஜ் ப செல்வம், பாஜக மாநில இளைஞரணி தலைவர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இதில் குறிப்பிடுவது போல, Narathar Media என ஏதேனும் புதியதாக ஊடக நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதா, என்ற விவரம் தேடினோம். அப்போது, அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தின் லிங்க் காண கிடைத்தது. அங்கே சென்று விவரம் தேடியபோது, தங்களது பெயரை சிலர் என்பவர் தவறாகப் பயன்படுத்தி, மேற்கண்ட வகையில் போலி நியூஸ் கார்டை பரப்பி வருவதாக, அவர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.

இதுதவிர, இந்த போலிச் செய்தியை பரப்பி வரும் சவுக்கு சங்கர் பற்றி விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், அவர்கள் விளக்கம் அளித்து, மற்றொரு பதிவையும் வெளியிட்டிருந்தனர்.

இது மட்டுமின்றி வினோஜ் ப செல்வம் பற்றி, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் செப்டம்பர் 4, 2020 அன்று வெளியிடப்பட்டிருந்த உண்மையான நியூஸ் கார்டையும் கீழே இணைத்துள்ளோம்.
இதுதவிர, வினோஜ் ப செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளதையும் காண முடிந்தது.
எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் வேண்டுமென்றே போலி நியூஸ் கார்டை பரப்பி வருவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Title:பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் ப செல்வம் பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!
Fact Check By: Pankaj IyerResult: False
