‘’நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஜோதிகாவை ஆதரித்து வெளியிட்ட ட்வீட் பதிவு,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதேபோல, விஜய் சேதுபதி பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை சிலர் ஆதாரமாக இணைத்திருந்தனர்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
நடிகை ஜோதிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘’தஞ்சை பெரிய கோயிலை சிறப்பாக பராமரிக்கிறார்கள். ஆனால், அதற்கு எதிரே அமைந்துள்ள அரசு மருத்துவமனை பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. கோயில் உண்டியலில் காசு போடுவதை விட அரசு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களுக்குச் செலவிடுவது மிகவும் நல்ல விசயம்,’’ எனக் கூறியிருந்தார்.

அவரது பேச்சு பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதையடுத்து அவரை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்துவருகின்றனர். இதையொட்டி, அவருக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்தது போல மேற்கண்ட தகவலை சிலர் பகிர தொடங்கியுள்ளனர்.

ஆனால், இது உண்மையான ட்வீட் இல்லை. இது போலியான ஒன்று என நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

Vijay Sethupathi Twitter Link Archived Link

இதன்பேரில், தமிழ் ஊடகங்கள் சிலவும் செய்தி வெளியிட்டுள்ளன. அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

News18 Tamil LinkPuthiyathalaimurai News Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் விஜய் சேதுபதி மேற்கண்ட ட்வீட் பதிவை வெளியிடவில்லை என்று தெளிவாகிறது. இதுபற்றி அவரும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். மேலும், இதுபோன்ற டிரெண்டிங் செய்திகள் பற்றிய உண்மைத்தன்மை அறிய விரும்பினால் எங்களுக்கு [email protected] என்ற இமெயில் முகவரி அல்லது 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:ஜோதிகாவை ஆதரித்து ட்வீட் வெளியிடவில்லை: விஜய் சேதுபதி மறுப்பு

Fact Check By: Pankaj Iyer

Result: False