மு.க ஸ்டாலின் புகைப்படம் பொறித்த Pampers பறிமுதல் என்று பரவும் செய்தி உண்மையா?  

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘மு.க.ஸ்டாலின் புகைப்படம் பொறித்த Pampers பறிமுதல்,’’ என்று கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ திமுகவின் Pampers-கள் பறிமுதல். சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் புகைப்படம் பொறித்த Pampers-களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது Sun News பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு என்று, தெரியவந்தது. 

குறிப்பிட்ட நியூஸ் கார்டில், Saturn News என்ற லோகோ இடம்பெற்றுள்ளது. இந்த பெயரில் தமிழ்நாட்டில் நியூஸ் சேனல் எதுவும் இல்லை. மேலும், இதுபோன்ற எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை. 

அடுத்தப்படியாக, திமுக ஐடி பிரிவு மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் பேசி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: மு.க ஸ்டாலின் புகைப்படம் பொறித்த Pampers பறிமுதல் என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply