
‘’காணாமல் போன இந்த சிறுமி மங்களூரில் பிச்சைக்காரர்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.
இதே தகவலை பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட சிறுமியின் புகைப்படம் பற்றி ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டில் ஒரு வதந்தி பரவியது. இந்த சிறுமி வேலூரைச் சேர்ந்தவர் என்றும், அரசுப் பள்ளி மாணவர் என்றும் கூறி அப்போது சிலர் தகவல் பரப்பினர். நாமும், அதுபற்றி ஆய்வு செய்து விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டோம்.
Fact Crescendo Tamil Article Link
அதே புகைப்படத்தை தற்போது எடுத்து, மீண்டும் புதியதுபோல குறிப்பிட்டு காணாமல் போன இந்த சிறுமி மங்களூரில் உள்ளார் என்று தகவல் பகிரப்படுகிறது. ஆனால், இது நம்பகமானது இல்லை.
ஏனெனில், ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன், இச்சிறுமி பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று சிலரும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சிலரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தனர்.
அவற்றை நமது முந்தைய ஆய்வுகளில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம். எனவே, நம்பகத்தன்மை இல்லாத பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து, புதியதுபோல தகவல் சேர்த்து, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:Rapid FactCheck: காணாமல் போன இந்த சிறுமி மங்களூரில் கிடைத்தாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
