பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாவிட்டால் ஸ்டாலின் விட்டு முன்பு தீ குளிப்பேன் என்று செய்தியாளர் செந்தில் வேல் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "ஸ்டாலின் விட்டு முன்பு 'தீ' குளிப்பேன் தேர்தல் வாக்குறுதியில் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அதை நிறைவேற்றவில்லை! இனியும் விடுதலை செய்ய தாமதம் செய்தால் திமுகவை கண்டித்து ஸ்டாலின் வீட்டு முன்பு தீ குளிப்பேன் - தமிழ் கேள்வி யூடியூபர் செந்தில் வேல் ஆவேசம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை Sri Sai என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குஜராத், உ.பி தேர்தல் பாஜக வெற்றி பெறாது, அப்படி வெற்றி பெற்றால் தற்கொலை செய்வேன் என்று செந்தில் வேல் கூறினார் என்று வதந்தி பரப்பப்பட்டது. செய்தியாளர் செந்தில் தீக்குளிப்பேன் என்று அறிவித்ததாகத் தொடர்ந்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனுடன் இந்த நியூஸ் கார்டும் நியூஸ் 18 வெளியிட்டது போல் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த நியூஸ் கார்டை நியூஸ் 18 வெளியிடவில்லை என்பதை உறுதி செய்ய, அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். ஆகஸ்ட் 2. 2023 ஆன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டையும் நியூஸ் 18 வௌியிடவில்லைல. இது போலியானது என்பதை உறுதி செய்துகொள்ள அந்த ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

Archive

செந்தில் வேல் இப்படி ஏதும் கருத்தை வெளியிட்டுள்ளாரா என்று அறிய அவரது ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அப்போது இது போலியான நியூஸ் கார்டு என்று குறிப்பிட்டு செந்தில் வேல் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்யாவிட்டால் ஸ்டாலின் வீட்டு முன்பு தீக்குளிப்பேன் என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று செந்தில் வேல் கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False