‘’விளாத்திகுளம் தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து அறிவிப்பு,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், சமயம் தமிழ் ஊடகத்தின் பெயரில் ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக ஜி.பி.முத்து அறிவிப்பு,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மையா என்று தெரியாமலேயே ஷேர் செய்து வருகின்றனர்.

Screenshot: similar fb posts with same caption

உண்மை அறிவோம்:
இந்த நியூஸ் கார்டு முதலில், கேலி செய்யும் நோக்கில் ஃபேஸ்புக்கில் சிலரால் பகிரப்பட்டது. அதற்கான ஃபேஸ்புக் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

Facebook Link 1Archived Link 1
Facebook Link 2Archived Link 2

ஆனால், படிப்படியாக, இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். எனவே, நமக்கும் சந்தேகம் வலுத்தது. இதன்பேரில், முதலில், சமயம் தமிழ் ஊடகத்தின் ஆசிரியர் குழுவினரை தொடர்புகொண்டோம். நம்மிடம் பேசிய அங்கு பணிபுரியும் நமது நண்பர், ‘’இது தவறான தகவல். நாங்கள் இப்படி எதுவும் வெளியிடவில்லை. இதனை தடை செய்ய உதவுங்கள். எங்களது நிறுவனத்தின் பெயரை கெடுப்பதாக உள்ளது,’’ என்றார்.

இதற்கு அடுத்தப்படியாக, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக, அதன் தொழிலாளர் அணி மாநில செயலாளராக உள்ள சு.ஆ.பொன்னுச்சாமி (@PONNUSAMYMILK) அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.

இந்த நியூஸ் கார்டை பார்வையிட்ட அவர், ‘’மக்கள் நீதி மய்யம் தற்போதுதான் படிப்படியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. நான் கூட சென்னை – பெரம்பூர் தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறேன். ஆனால், விளாத்திகுளம் வேட்பாளராக இதுவரை யாரும் அறிவிக்கப்படவில்லை. அந்த தொகுதியின் வேட்பாளர் அறிவிக்கப்படும்போது உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன். இது எங்களது கட்சிக்கு எதிராக வேண்டுமென்றே பகிரப்படும் போலிச் செய்தி,’’ என்று தெரிவித்தார்.

எனவே, நகைச்சுவைக்காக பகிரப்பட்ட நியூஸ் கார்டு படிப்படியாக உண்மை போல மாறிவிட்டதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ஜிபி முத்துவை மக்கள் நீதி மய்யம் அறிவித்ததா?

Fact Check By: Pankaj Iyer

Result: False