பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாரா?

இந்தியா சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

குறிப்பிட்ட வீடியோ பற்றிய தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி மனைவி யசோதாபென் குஜராத்தில் நடைபெற்ற 2017 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்படி காங்கிரஸ் தரப்பில் அழைப்பு தரப்பட்டது. ஆனால், அவர் அதனை நிராகரித்தார். அது மட்டுமின்றி மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும் அவர் ஆதரித்துப் பேசியிருந்தார். இதெல்லாம் கடந்த கால நிகழ்வுகள்.

TOI Link 1 I TOI Link 2

இந்த சூழலில், மோடியின் மனைவி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டார் எனக் கூறி மேற்கண்ட வகையில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையல்ல.

கடந்த 2017ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கியான் மந்திர் கமிட்டி 50வது ஆண்டு நிறைவு விழாவில் யசோதாபென் பங்கேற்று பேசியிருந்தார். அந்த நிகழ்வு பற்றிய வீடியோவில் ஒரு பகுதியை எடுத்து எடிட் செய்து, மேற்கண்ட வகையில் பலரும் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையான வீடியோ முழுமையாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் ஆதாரத்திற்காக, நமது குஜராத் பிரிவினர் உதவியுடன் யசோதா பென் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். நம்மிடம் பேசிய அவரது இளைய சகோதரர் அசோக் மோடி, ‘’யசோதா பென் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. அவர் எந்த கட்சியுடனும் தொடர்பில் இல்லை. எனவே, அவரை தொடர்புபடுத்தி பகிரப்படும் இத்தகைய வதந்திகள் உண்மையல்ல,’’ என்றார்.

எனவே, மோடி மனைவி யசோதா காங்கிரஸில் சேர்ந்துவிட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False