FactCheck: ஆற்றில் குளித்ததற்காக தலித் பெண்ணை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்கினரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூகம்

‘’ஆற்றில் குளித்த காரணத்தால் தலித் பெண்ணை ஆடை அவிழ்த்து கொடூரமாக தாக்கிய ஆர்எஸ்எஸ் நபர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் வீடியோ தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு, வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

இந்த வீடியோவில், இளம்பெண் ஒருவரை கும்பலாகச் சேர்ந்து சிலர் கடுமையாக தாக்குவதைக் காண முடிகிறது. ‘’இந்த நதியில் ஒரு தலித் பெண் குளித்ததால் ஆர்எஸ்எஸ், பாஜக இந்திய தலிபான்கள் கும்பலாக சேர்ந்து சித்ரவதை,’’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவில் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, அதனை ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் பதிவேற்றி தகவல் தேடினோம். அப்போது, இந்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் உள்ள பிபல்வா என்ற கிராமத்தில் நிகழ்ந்ததாக தெரியவந்தது.

இவர்கள் கூறுவதுபோல ஒருவர் தாக்கப்படவில்லை. மாறாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் இருவர், ஆண் ஒருவருடன் பேசிப் பழகியதால் ஆத்திரமடைந்த, அந்த பெண்களின் உறவினர்களே, இருவரையும் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப் பதிந்து, சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை கைது செய்தும் உள்ளனர்.

இதுபற்றி ஊடகங்களில் வெளியான செய்தி மற்றும் வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

NDTV Link I freepressjournal link I The Hindu Link

எனவே, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த வேறொரு காரணத்திற்கான வன்முறை சம்பவத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஆற்றில் குளித்ததற்காக தலித் பெண்ணை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்கினரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False