FACT CHECK: ராகவன் படத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கும்படி அண்ணாமலை கூறியதாக பரவும் வதந்தி…

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தமிழக பா.ஜ.க முன்னாள் பொதுச் செயலாளர் ராகவன் படத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கும்படி தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது போன்ற போட்டோ பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் பணிவான வேண்டுகோள்… வினாயகர் சதூர்த்தி அன்று நம்ம ராகவன் படத்தினை மோடிஜி அவர்களுக்கு அனுப்பி பயனடைவோம்” என்று இருந்தது.

இந்த பதிவை கருத்து கண்ணாயிரம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 செப்டம்பர் 7ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் ராகவன். இவர் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வீடியோ வெளியானதால் தன்னுடைய கட்சிப் பதவியை ராகவன் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், அவரது பாலியல் காட்சி புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இதை பார்க்கும் போதே பா.ஜ.க வெளியிட்ட வேறு ஒரு புகைப்பட பதிவை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிகிறது.

ராகவன் புகைப்படத்துக்கு பின்புறம் ஏதோ மறைவாக இருப்பது தெரிகிறது. உயர் திரு மோடி ஜி அவர்கள் என்பது தனியாக சேர்க்கப்பட்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது. விநாயகர் சதுர்த்தி என்பதை ‘வினாயகர் சதூர்த்தி’ என்று குறிப்பிட்டிருந்தனர். இவை எல்லாம் இந்த புகைப்பட பதிவு போலியானது என்பதை உறுதி செய்கின்றன.

Archive

தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்ட அசல் பதிவைத் தேடினோம். தமிழ்நாடு பா.ஜ.க ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்ட போது உண்மையான புகைப்பட பதிவு நமக்கு கிடைத்தது.

ராகவன் புகைப்படம் இருக்கும் இடத்தில், “மாற்று மதப் பண்டிகைகளுக்கு மனமார வாழ்த்து சொல்லும் நம் மாநில முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை நாம் அனைவரும் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம். மாநில தலைவர் திரு. K.அண்ணாமலை” என்று இருந்தது.

இதை எடுத்து எடிட் செய்து, தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராகவன் ஆபாச புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு அனுப்புங்கள் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் புகைப்படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராகவன் படத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கும்படி அண்ணாமலை கூறியதாக பரவும் வதந்தி…

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply