‘நாம் தமிழர் கட்சி 19% வாக்குகள் பெறும்’ என்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் கூறியதா? 

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’நாம் தமிழர் கட்சி 19% வாக்குகள் பெறும்’’ என்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி 19% வாக்குகள் என்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் கருத்துக்கணிப்பு வெளியிட்டது’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் செய்தி எதுவும் வெளியிட்டுள்ளதா என்று தகவல் தேடினோம். ஆனால், அப்படி எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. 

அதேசமயம், அவர்கள் 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டிருந்த கருத்துக் கணிப்பு ஒன்றையும் கண்டோம். 

இந்த கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்றே கூறப்பட்டுள்ளது.  

மேலும், இதுதொடர்பாக, நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் தனது சமூக வலைதள பக்கங்களில் டெம்ப்ளேட் வடிவில் செய்தி ஒன்றையும் வெளியிட்டிருந்தது. 

இதில், திமுக, அதிமுக, பாஜக, மற்றவை என்றே குறிப்பிட்டு வாக்கு சதவீத எதிர்பார்ப்பையும் குறிப்பிட்டிருந்தன. எந்த இடத்திலும், ‘நாதக’ என்று குறிப்பிடவில்லை. 

இந்த டெம்ப்ளேட்டை எடிட் செய்து, ‘நாதக’ என்று பெயரை சேர்த்து, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் வதந்தி பரப்புவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:‘நாம் தமிழர் கட்சி 19% வாக்குகள் பெறும்’ என்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் கூறியதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Altered