‘அயோத்தியில் கசாப்புக் கடைகளுக்கு அனுமதி; காய்கறிகளை வெட்டி விற்கலாம்’ என்று பரவும் வதந்தி…
‘’ அயோத்தியில் கசாப்புக் கடைகளுக்கு அனுமதி; காய்கறிகளை வெட்டி விற்கலாம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’அயோத்தியில் கசாப்புக் கடைகளுக்கு அனுமதி! அசைவம் தவிர்த்து காய்கறிகளை வெட்டி விற்கலாம். அயோத்தி மாவட்ட நிர்வாகம் தகவல்!.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
News 7 Tamil லோகோவுடன் உள்ளதால், இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி, இதனை ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வகையில், News 7 Tamil ஏதேனும் செய்தி வெளியிட்டதா என்று தகவல் தேடினோம். ஆனால், எந்த செய்தியும் இவ்வாறு காணக் கிடைக்கவில்லை.
இதையடுத்து, News 7 Tamil ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசினோம். அவர், ‘’குறிப்பிட்ட டெம்ப்ளேட்டில் ns7.tv என்று எங்களது இணையதள முகவரியை எழுதியுள்ளனர். ஆனால், இந்த டெம்ப்ளேட்டை நாங்கள் மாற்றிவிட்டோம். தற்போது news7tamil.live என்ற இணையதள முகவரியுடன் கூடிய டெம்ப்ளேட்டையே நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். தவிர, இதுபோன்று எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. இது போலியானது,’’ என்று தெரிவித்தார்.
மேலும், ‘அயோத்தி முழுக்கவே இறைச்சி விற்பனைக்குத் தடை என்று கூறுவது உண்மையல்ல. ராமர் கோயிலை சுற்றி 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மட்டுமே அசைவம் தடை செய்யப்பட்டுள்ளது’.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி ‘News 7 tamil பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று’ என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:‘அயோத்தியில் கசாப்புக் கடைகளுக்கு அனுமதி; காய்கறிகளை வெட்டி விற்கலாம்’ என்று பரவும் வதந்தி…
Written By: Fact Crescendo TeamResult: False