‘பாஜக.,வில் இணைந்த கார் திருடன் ஜானி பாய்’ என்று News Tamil 24×7 செய்தி வெளியிட்டதா? 

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’பாஜக.,வில் இணைந்த கார் திருடன் ஜானி பாய்’’, என்று கூறி, News Tamil 24×7 லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Claim Link l Archived Link 

இதில், ‘’ கட்சிக்கு கார் இல்ல போல… அதான் வேலை ஆள் எடுத்து இருக்காணுங்க….

பூலோ பரத் மத்தாக் கிளி….🚩🚩🚩’’ என்று எழுதப்பட்டுள்ளது.  

News Tamil 24×7 லோகோவுடன் உள்ளதால், இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி, இதனை ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில், News Tamil 24×7 ஊடகம் தரப்பில் செய்தி ஏதேனும் வெளியிடப்பட்டதா என்று தகவல் தேடினோம். ஆனால், எந்த செய்தியும் இவ்வாறு காணக் கிடைக்கவில்லை. 

இதையடுத்து, News Tamil 24×7 ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு தரப்பில் விசாரித்தபோது, ‘’இதுபோன்று எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. இது எங்களது பெயரில் பரவும் போலியான செய்தி,’’ என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து, நாம் தகவல் தேடியபோது, மேற்கண்ட நியூஸ் கார்டு, Johny Bhai @Johni_raja என்ற ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை கேலி செய்யும் நோக்கில் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.  

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி ‘News Tamil 24×7 பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று’ என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:‘பாஜக.,வில் இணைந்த கார் திருடன் ஜானி பாய்’ என்று News Tamil 24×7 செய்தி வெளியிட்டதா?

Written By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply