FactCheck: ராமனா, ராவணனா, யார் உண்மையில் கடவுள்? வைரல் செய்தியால் சர்ச்சை…

அரசியல் ஆன்மீகம் சமூக ஊடகம்

‘’ராவணன் கடவுளா, ராமன் கடவுளா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வைரல் செய்தி ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

‘’யார் உண்மையில் கடவுள்? சீதையை மீட்க ராமன் கட்டிய பாலம் உண்மையானால், சீதையை கடத்த ராவணன் கட்டிய பாலம் எங்கே? ராமன் கடவுளா, ராவணன் கடவுளா,’’ எனும் அர்த்தத்தில் மேற்கண்ட நியூஸ்கார்டில் எழுதியுள்ளனர். இது பார்ப்பதற்கு, முன்னணி ஊடகம் வெளியிட்ட நியூஸ்கார்டு டெம்ப்ளேட் போலவே இருப்பதால், உண்மையான செய்தியாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

இதனை வாட்ஸ்ஆப் வழியே, நமது வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார்.

ஃபேஸ்புக்கிலும் பலர் இதனை உண்மை என்று பகிர்வதைக் கண்டோம்.

FB Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டில் கூறப்பட்டுள்ள கருத்து பற்றி நாம் எந்த ஆய்வும் செய்யவில்லை. இது வைரலாகப் பகிரப்படுவதால், தமிழ் ஊடகங்கள் எதுவும் இத்தகைய செய்தியை வெளியிட்டதா, இல்லையா என்ற சந்தேகத்திற்கு மட்டுமே பதில் தேடினோம்.

அதன்படி, இந்த நியூஸ் கார்டு பார்ப்பதற்கு, புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதைப் போலவே உள்ளது. அதற்கேற்ப, நியூஸ் கார்டின் சில இடங்களில் திருத்தமும் செய்யப்பட்டிருக்கிறது.

ஒப்பீட்டிற்காக, புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட சில பிரேக்கிங் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்களை கீழே இணைத்துள்ளோம்.

இதுதொடர்பாக, புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் சரவணனிடம் கேட்டபோது, ‘’வழக்கமாக நாங்கள் வெளியிடும் பிரேக்கிங் நியூஸ் கார்டில் ஒன்றை மாடலாக வைத்துக் கொண்டு இந்த போலியான செய்தியை தயாரித்து பகிர்ந்துள்ளனர்,’’ என்று குறிப்பிட்டார்.

கூடுதல் ஆதாரத்திற்காக, புதிய தலைமுறை வெளியிட்ட ஒரு பிரேக்கிங் நியூஸ் கார்டையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே பகிர்ந்துள்ளோம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், புதிய தலைமுறை லோகோவை எடிட் செய்து மறைத்துவிட்டு, அதே டெம்ப்ளேட்டில் மேற்கண்ட போலியான செய்தியை தயாரித்துச் சிலர் பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ராமனா, ராவணனா, யார் உண்மையில் கடவுள்? வைரல் செய்தியால் சர்ச்சை…

Fact Check By: Pankaj Iyer 

Result: False