பா.ஜ.க-வுக்கு செல்ல தயார் என்று செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

அண்ணாமலைதான் சிறந்த ஆளுமை, பாஜக-வுக்கு செல்ல தயார் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக நிர்வாகியுமான செல்லூர் ராஜூ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை தான் சிறந்த ஆளுமை. சசிகலா காலில் விழுந்த எடப்பாடி இன்று என்னைப் போன்ற மூத்த நிர்வாகிகள் அவரின் காலில் விழ வேண்டும் என எடப்பாடி வற்புறுத்துகிறார். அண்ணாமலை அவர்கள் அழைத்தால் நான் தொண்டர்களுடன் பாஜக செல்ல தயார் – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புகழ்ந்தது போல நியூஸ் கார்டை பாஜக-வினர் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போதே உண்மையானது இல்லை என்று தெரிந்தது. 

இந்த நியூஸ் கார்டின் வடிவமைப்பு, தமிழ் ஃபாண்ட் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. மேலும், வாக்கிய அமைப்பும் தவறாக இருந்தது. செல்லூர் ராஜூ என்பதற்குப் பதில் செல்லூர் ராஜ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது, புதிய தலைமுறை வெளியிட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.

Archive

இதை உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, இப்படி ஒரு நியூஸ் கார்டை வெளியிடவில்லை என்று புதிய தலைமுறை பதிவிட்டிருந்தது. இதன் மூலம், இந்த நியூஸ் கார்டு உண்மையானது இல்லை என்பது உறுதியாகிறது.

முடிவு:

அண்ணாமலை அழைத்தால் பாஜக-வுக்கு வரத் தயார் என்று செல்லூர் ராஜூ கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பா.ஜ.க-வுக்கு செல்ல தயார் என்று செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply