‘’உணவு கொடுத்ததால் ஜோதிமணியை ஆதரிக்கிறேன்,’’ என்று சுப. வீரபாண்டியன் சொன்னதாகக் கூறி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதில், சுப. வீரபாண்டியன், ‘’ஜோதிமணி எனக்கு உணவு அளித்தவர் என்பதால் அவரை மரியாதைக் குறைவாக பேசிய கரு.நாகராஜனை கண்டிக்கிறேன்,’’ என ட்வீட்டரில் பகிர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3
Facebook Claim Link 4Archived Link 4
Facebook Claim Link 5Archived Link 5
Facebook Claim Link 6Archived Link 6

உண்மை அறிவோம்:
டிவி நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணிக்கும், பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜனுக்கும் இடையே காரசாரமாக விவாதம் நிகழ்ந்தது. இதன் அடிப்படையில், ஒரு தரப்பினர் ஜோதிமணிக்கும், மற்றொரு தரப்பினர் கரு.நாகராஜனுக்கும் ஆதரவாக சமூக ஊடகங்களில் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளை நாம் காண நேரிட்டது. இவற்றில் குறிப்பிட்டதுபோல, ‘உணவு அளித்ததால் ஜோதிமணியை ஆதரிக்கிறேன்,’ என்று சுப.வீரபாண்டியன் கூறியிருக்க வாய்ப்பே இல்லை.

உண்மையில், சுப. வீரபாண்டியன் இப்படி ட்வீட் வெளியிட்டாரா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவரது ட்வீட்டர் பக்கத்தில், அவர் மே 18ம் தேதியன்று 2 ட்வீட்களை வெளியிட்டிருக்கிறார். அவை இரண்டுமே வேறு மாதிரியாக உள்ளன. அவற்றை எடிட் செய்து சிலர் இதுபோன்ற வதந்தியை பகிர்ந்திருக்கிறார்கள்.

Suba Veerapandian Twitter PostArchived Link

தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, சுப.வீரபாண்டியன் பெயரில் போலியான செய்தி உருவாக்கி, பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவுகளில், தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:உணவு கொடுத்ததால் ஜோதிமணியை ஆதரிக்கிறேன் என்று சுப வீரபாண்டியன் சொன்னாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False