குஜராத்திலிருந்து பசுக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத்தில் உள்ள அதானி துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பசுக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive துறைமுகத்தில் லாரிகளில் பசு மாடுகள் இறக்குமதி / ஏற்றுமதிக்காகத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், “அதானி துறைமுகம், குஜராத்” என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “பசுக்கள்,, காளைகள் மோடி ஆட்சியில் வெளிநாடுகளுக்கு சுற்றுலாவுக்கும்,, […]

Continue Reading

தாமரைக்கு ஓட்டு கேட்ட நபருக்கு விழுந்த அடி என்று பரவும் வீடியோ உண்மையா?

தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கச் சொன்ன பாஜக நிர்வாகியைத் தாக்கிய மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive பாஜக நிர்வாகி ஒருவரை பொது மக்கள் தாக்குவது போன்ற வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் இந்தியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. மொழிமாற்றம் செய்து பார்த்தபோது “பாஜக தலைவர்களின் நிலை, இந்த முறை 400 உதைகள் நிச்சயம்” என்பது போன்று […]

Continue Reading

பொதுக் குழாயில் தண்ணீர் குடித்த இந்த நபரை உயர் சாதியினர் தாக்கினரா?

மோடியின் ஆட்சிக் காலத்தில் குழாயில் தண்ணீர் குடித்தார் என்பதற்காகத் தாழ்த்தப்பட்ட இந்துவை உயர் சாதி இந்துக்கள் அடித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காலணியில் தண்ணீர் ஊற்றி அதை ஒருவரை குடிக்கச் செய்யும் வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மோடியின் இந்தியாவின் அற்புதமான படம். மோடி காலத்தில் உயர் சாதியினரின் […]

Continue Reading

‘கோவை ரயில், விமான நிலையம் தனியார் மயமாக்கப்படும்’ என்று அண்ணாமலை வாக்குறுதி அளித்தாரா?

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோவை ரயில், விமான நிலையங்கள் தனியார்மயம் ஆக்கப்படும், என்று அண்ணாமலை தேர்தல் வாக்குறுதி அளித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோவை விமான நிலையம் […]

Continue Reading

கன்னியாகுமரியில் பாஜக தேர்தல் பொதுக் கூட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் கூட்டமே இல்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive காலி நாற்காலிகளைப் பார்த்து பாஜக கன்னியாகுமரி வேட்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் பேசும் புகைப்படம் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” கன்னியாகுமாரியில் பாஜக வேட்பாளர் பொன்னார் […]

Continue Reading

வட இந்தியாவில் வாக்கு கேட்டுச் சென்ற பா.ஜ.க-வினர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் வாக்கு கேட்டுச் சென்று பாரதிய ஜனதா கட்சியினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சியினரை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் தாக்கும் பழைய வீடியோ ஃபேஸ்புக்கில் புதிதாக பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*வடக்கே வெளுப்பு துவங்கியது,வாக்கு கேட்டு சென்ற பிஜேபி கட்சிகளுக்கு*” […]

Continue Reading

‘திமுக கொடுத்த தேர்தல் பரிசு’ என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக வாக்காளர்களுக்கு மது, சிகரெட், பணம் அடங்கிய பரிசு பெட்டியை வழங்கி வருகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகைப்படத்துடன் கூடிய தேர்தல் பரிசு பெட்டி வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஸ்டாலின் தான் வராரு என்ற பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “ஓட்டுங்கடா ஸ்டிக்கர் […]

Continue Reading

நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் தேர்வில் மோதல் என்று பரவும் பழைய வீடியோ!

உத்தரப்பிரதேசத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நடைபெற்ற வேட்பாளர் தேர்வு ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக எம்.பி-யும் எம்.எல்.ஏ-வும் செருப்பால் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் செருப்பால் அடித்துக்கொண்ட பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் தேர்வுசெய்யும் ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டு பாஜக […]

Continue Reading

ராஜஸ்தானில் பாஜக நிர்வாகிகள் அடித்துக்கொண்டனர் என்று பரவும் வீடியோ உண்மையா?

ராஜஸ்தானில் வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்ததால் பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு பேர் காலணிகளால் அடித்துக்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் பாஜக தலைவர்களின் நிலை. குஜராத் லாபியின் டிக்கெட் விநியோகத்திற்குப் பிறகு, ராஜஸ்தானில் பாஜக அனைத்து மாவட்டங்களிலும் பெரும் கொந்தளிப்பைக் கண்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

உ.பி-யில் 165 இடங்களில் வாக்குகளை பிரித்து பாஜக வெற்றிக்கு ஓவைசி உதவினாரா?

நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில் 165 இடங்களில் ஓவைசி வாக்குகளைப் பிரித்து, பாஜக வெற்றிக்கு காரணமாக அமைந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஓவைசி புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “200 வாக்குகள் வித்தியாசத்தில் 7 தொகுதிகள். 500 வாக்குகள் வித்தியாசத்தில் 23 தொகுதிகள். 1000 வாக்குகள் வித்தியாசத்தில் 49 தொகுதிகள். 2000 வாக்குகள் […]

Continue Reading

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக பரவும் வதந்தி!

உள்ளாட்சித் தேர்தலில் திமுக பின்னடைவைச் சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும். 2022 பிப்ரவரி 19ஆம் தேதி நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மிகவும் பின்னடைவை சந்திக்க […]

Continue Reading

உ.பி-யில் பா.ஜ.க பெண் வேட்பாளரை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க பெண் வேட்பாளரை பொது மக்கள் விரட்டி அடித்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவரை பொது மக்கள் விரட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. நிலைத் தகவலில் “உ.பியில் ஓட்டுக்கெட்டு சென்ற #பாஜக பெண் வேட்பாளரைக் கல்லால் அடித்து விரட்டிய ஊர் மக்கள் (இந்து விரோதி, தேச விரோதிகள்)…. தரமான […]

Continue Reading

பாஜக வேட்பாளரை விரட்டியடித்த உ.பி., மக்கள் என்று பரவும் பழைய வீடியோ!

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளரை மக்கள் விரட்டியடித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் ஒரு நபரை பலர் துரத்துகின்றனர். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர். இதனுடன் பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “உ.பி பாஜக வேட்பாளரை காவல் அதிகாரிகள் பத்திரமாக […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்தில் உலா வரும் கண்டெய்னர் அலுவலகம் என்று பரவும் படம் உண்மையா?

தமிழகத்தில் சுற்றித் திரியும் கண்டெய்னர் அலுவலகத்தின் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அலுவலக அறை போல் காட்சி அளிக்கும் ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தொழில்நுட்ப மென் பொருட்களோடு கண்டெய்னரில் அலுவலகம் மாதிரி செட்டப் பண்ணி தமிழகத்தில் உலாவும் லாரிகள் ! ஏன் எதுக்கு?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தமிழன் […]

Continue Reading

FACT CHECK: பீகாரில் பா.ஜ.க வெற்றி பெற்ற முறை என்று பகிரப்படும் ஹரியானா வீடியோ!

பீகாரில் பா.ஜ.க இப்படித்தான் வெற்றி பெற்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நம்முடைய ஆய்வில் அந்த வீடியோ 2019ம் ஆண்டு ஹரியானாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வாக்குப்பதிவு மையத்தில் பெண்கள் வாக்களிக்க வருவதற்கு முன்பு கட்சி ஏஜெண்ட் ஒருவர் சென்று வாக்களித்துவிட்டு வந்து அமரும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. அவருக்கு வாக்கு மைய அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது தெரிகிறது. நிலைத் […]

Continue Reading

FACT CHECK: பீகாரில் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் என்று பரவும் பழைய படம்!

பீகார் தேர்தல் பிரசார கூட்டத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சைக் கேட்கக் கூடிய மக்கள் வெள்ளம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கடல் போல மக்கள் திரண்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “மக்கள் வெள்ளம். எங்கே? பீகாரில் தேர்தல் பிரசார கூட்டம். யோகி ஆதித்தநாத் பேச்சை கேட்க இன்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading