
‘‘கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ராசிபுரம் மாவட்டத்தை சார்ந்த மாநில துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான திரு. K.P.ராமலிங்கம் அவர்களை நடவடிக்கை குழுவின் பரிந்துரைப்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’’, என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது வேண்டுமென்றே பகிரப்படும் வதந்தி, என்று தெரியவந்தது. இதுபற்றி KP Ramalingam அவரது X வலைதளம் மூலமாக வெளியிட்ட மறுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, பாஜக சார்பாகவும் வெளியிடப்பட்ட மறுப்பு விவரம் இதோ…
இதன்படி, கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இருந்து நீக்கப்படவில்லை, என்று தெளிவாகிறது. மேலும், இந்த விவகாரத்தில் பாஜக சார்பாக, போலீஸ் புகார் தரப்பட்டுள்ளது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


