‘‘திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’’ என்று விஜய் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

நடிகர் விஜய் பெயரில் உள்ள இந்த அறிக்கையில், ‘’வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், தமிழக மக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் பாராமல் ஒட்டுமொத்த தேசத்தையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு யார் செயல்படுவார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் வாக்கு சேகரிப்பில் முனைப்புடன் செயல்படுகின்றன.

இந்த சூழலில், நடிகர் விஜய் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறியதாகக் குறிப்பிட்டு மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பரப்புகின்றனர். ஆனால், இவ்வாறு விஜய் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அவரது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் பேசி இதனை உறுதிப்படுத்தியுள்ளோம்.

ஏற்கனவே விஜய் வெளியிட்ட அறிக்கை ஒன்றை எடிட் செய்து, இவ்வாறு போலியான தகவலை பரப்புகின்றனர் என்று தெரியவருகிறது. அத்துடன், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் (புஸ்ஸி ஆனந்த்) ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கட்சி தொடங்கியபோதே, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதுதான் இலக்கு என்றும், அதுவரையில் யாருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அறிக்கை விஜய் பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று விஜய் கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False