தனியாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய் என்று பரவும் புகைப்படத்தால் சர்ச்சை…

Altered அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘‘தனியாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இத்தனை கோடி பேர் உனக்காக இருக்குறப்போ தனியா பிறந்தநாள் கொண்டாடிட்டு இருக்கியேனா,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், விஜய் கேக் வெட்டுவது போன்ற புகைப்படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.   

Claim Link 1 l Claim Link 2 l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் பற்றிய தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.  

இதன்படி, ‘’ To the person who makes it all worth it,HBD❤️🧿 00.00,’’ என்று தலைப்பிட்டு, நடிகை திரிஷா புகைப்படம் ஒன்றை, அவரது X வலைதளத்தில் ஜூன் 23, 2026 அன்று பகிர்ந்துள்ளார். இதனை எடுத்து, எடிட் செய்து, மேற்கண்ட வகையில் பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது. 

ஆனால், இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, எங்கே எடுக்கப்பட்டது போன்ற எந்த விவரமும் நமக்கு தெரியவில்லை. இதுபற்றி கூடுதல் விவரம் கிடைத்தால், அதனையும் இங்கே வெளியிட தயாராக உள்ளோம்.   

கூடுதல் ஆதாரத்திற்காக, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் அலுவலகத்திலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: தனியாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய் என்று பரவும் புகைப்படத்தால் சர்ச்சை…

Fact Check By: Pankaj Iyer

Result: Altered

Leave a Reply