தனி விமானத்தில் விஜய் மற்றும் திரிஷா கொண்டாட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘‘தனி விமானத்தில் விஜய் மற்றும் திரிஷா கொண்டாட்டம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், தனி விமானத்தில் விஜய் மற்றும் திரிஷா கொண்டாடுவது போன்ற புகைப்படம், இடம்பெற்றுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது வேண்டுமென்றே AI முறையில் எடிட் செய்து, பகிரப்படும் புகைப்படம், என்று தெரியவந்தது. 

இதுதொடர்பாக, தவெக தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, ‘’அரசியல் உள்நோக்கத்துடன், வேண்டுமென்றே AI முறையில் இதுபோன்ற போலியான புகைப்படங்களை தயாரித்து, சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இவ்வாறு எந்த புகைப்படமும் எங்களது தலைவர் வெளியிடவில்லை,’’ என்று தெரிவித்தனர்.  

அடுத்தப்படியாக, நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட jkcreativeworks05 என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று பார்த்தோம். அதில், தெளிவாக, ‘’Photoshop & Ai’’ மூலமாக இந்த படம் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், நடிகை திரிஷா தரப்பிலும் இதுபற்றி பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் உண்மையானதல்ல; AI மூலமாக தயாரிக்கப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: தனி விமானத்தில் விஜய் மற்றும் திரிஷா கொண்டாட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply