FactCheck: காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்திய தமிழர்- பழைய செய்தியை தற்போது பகிர்வதால் குழப்பம்!
‘’காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்திய தமிழர்- கண்டுகொள்ளாத ஊடகங்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
‘’காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை கடந்த 238 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்களான சுப்புசுந்தரம் செட்டியார் தம்பதி நடத்தியுள்ளனர், இதனை ஊடகங்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை,’’ என்று இந்த புகைப்பட செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஃபேஸ்புக்கில் பார்த்தபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது உண்மைதான். ஆனால், வேடிக்கை என்னவெனில் இது கடந்த 2018ம் ஆண்டு நிகழ்ந்ததாகும். அப்போதே இதனை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன.
இதுபற்றிய புகைப்பட தொகுப்பையும் விகடன் ஊடகம் வெளியிட்டிருக்கிறது. அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
எனவே, 2018ல் முடிந்து போன நிகழ்வு பற்றிய செய்தியை புதியதுபோல தற்போது (2021ம் ஆண்டு) பகிர்ந்தது மட்டுமின்றி, ‘ஊடகங்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை; அதிகம் ஷேர் செய்க,’ என்று கூறி தேவையற்ற பரபரப்பை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel
Title:காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்திய தமிழர்- பழைய செய்தியை தற்போது பகிர்வதால் குழப்பம்!
Fact Check By: Pankaj IyerResult: Missing Context