மாற்றம் தேவை இல்லை என்று நடிகை திரிஷா கூறினாரா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘மாற்றம் தேவை இல்லை,’’ என்று நடிகை திரிஷா கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ மாற்றம் தேவை இல்லை. திமுக ஆட்சி நல்லா தான் இருக்கு- நடிகை திரிஷா பேட்டி.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link      

News Tamil 24×7 லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு, என்று தெரியவந்தது. 

இதன்படி, உண்மையான நியூஸ் கார்டில், ‘’ ஜனநாயகக் கடமை. அனைவரும் வாக்களியுங்கள்; வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமையாகும். – நடிகை திரிஷா பேட்டி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  

News Tamil 24×7 Link 1 l Link 2 

கூடுதல் ஆதாரத்திற்காக, News Tamil 24×7 டிஜிட்டல் பிரிவிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Result Stamp

Title: மாற்றம் தேவை இல்லை என்று நடிகை திரிஷா கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False

Leave a Reply