‘ஆட்சி மாற்றம் No Need’ என்று அஜித் குமார் கூறினாரா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘ஆட்சி மாற்றம் No Need,’’ என்று அஜித் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ சீ No Need. வேளச்சேரி தொகுதி திருவான்மியூர் பகுதியில் வாக்களித்துவிட்டு திரும்புகையில். மாற்றம் வருமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு. மாற்றம் தேவையில்லை. (No Need) என பதிலளித்தார் நடிகர் அஜித் குமார்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  l Archived Link        

மாலை முரசு லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது மாலை முரசு ஊடகத்தின் பெயரில் பரவும் போலியான செய்தி, என்று தெரியவந்தது. 

Malai Murasu Link 1 l Link 2 

இதன்படி, அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே அஜித் குமார் பற்றி வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது. 

மேலும், அஜித் குமார் தரப்பிலும் விளக்கம் அளித்துள்ளதாக, ஊடகங்களில் வெளியான செய்தி ஆதாரம் இதோ…

Kumudam Link l News Tamil 24×7

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: ‘ஆட்சி மாற்றம் No Need’ என்று அஜித் குமார் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply