
ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஏவுகணை அல்லது டிரோன் தாக்குதல் நடப்பது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துபாய் மேல நல்லா ரசிச்சு ஏவுகணை போட்டு விளையாடுறான் ஈரான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. பதிலடியாக அரபு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. அப்படி துபாய் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் காட்சி என்று குறிப்பிட்டுப் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அப்படிப் பரப்பப்படும் ஒரு வீடியோவை ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். 2025ம் ஆண்டு ஈரான் – இஸ்ரேல் மோதலின் போதும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. டெல் அவிவ் மீது தாக்குதல் என்று இஸ்ரேல் ராணுவமே இந்த வீடியோவை பதிவிட்டிருந்ததாக சில செய்திகளும் நமக்கு கிடைத்தன.

அதே நேரத்தில் 2024ம் ஆண்டில் இந்த வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது. சில பதிவுகளில் எந்த இடம் என்று குறிப்பிடவில்லை. ஆனால், சிறப்பான சம்பவம் என்பது போல பதிவிட்டிருந்தனர். ஒரு பதிவில் இது டெல் அவிவ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
2024ம் ஆண்டு இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றின் வீடியோவை எடுத்து, 2026ல் துபாய் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று தவறாகப் பதிவிட்டிருப்பது இதன் மூலம் உறுதியானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தவறான தகவலைக் கொண்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2024ம் ஆண்டு இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் வீடியோவை இப்போது துபாய் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:துபாய் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


