அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலை உயர்ந்த சைக்கிள் கொடுத்ததா தவெக அரசு?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தவறாக வழிநடத்துபவை I Misleading

‘‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தவெக அரசு விலை உயர்ந்த சைக்கிள் கொடுத்தது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’தரம் உயர்ந்து ஸ்டைலாக மாறிய இலவச மிதிவண்டிகள் (News 26T Mountain Bicycles). மாணவ, மாணவியர் மகிழ்ச்சி ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்பட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்று தவெக அரசு விலை உயர்ந்த சைக்கிள் எதுவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, வழங்கவில்லை, என்று தெரியவந்தது.  

இதன்படி, விழுப்புரம் மாவட்டம் கெங்கபுரம் பகுதியில் உள்ள Sri Parameswar Memorial உயர்நிலைப்பள்ளியில் இந்த சைக்கிள் தரப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ அந்த பள்ளி சார்பாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

இதன்படி, குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பதிவை எடுத்து, தவெக அரசு இவ்வாறு வழங்கியதாக வதந்தி பரப்புகிறார்கள். ஆனால், அந்த பதிவிலேயே சம்பந்தப்பட்ட பள்ளி சார்பாக ‘’இது தனியார் பள்ளி, தவெக அரசுக்கு இதில் தொடர்பில்லை,’’ என்று தெளிவாகக் கமெண்ட் செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த வதந்தி நிற்கவில்லை. 

குறிப்பிட்ட பள்ளியில் ஆண்டுதோறும் இவ்வாறு 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு சைக்கிள் தருவது வழக்கம். இது மட்டுமின்றி, பல்வேறு சலுகைகளும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. இதுபற்றி Sri Parameswar Memorial High School தரப்பில் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

இறுதியாக, தவெக தலைமை அலுவலகத்திலும் பேசி, மறுப்பு பெற்றுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Result Stamp

Title: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலை உயர்ந்த சைக்கிள் கொடுத்ததா தவெக அரசு?

Fact Check By: Pankaj Iyer

Result: Misleading

Leave a Reply