
‘’பழங்குடியினப் பெண் என்றைக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆகிறாரோ அன்றைய நாளில் இட ஒதுக்கீட்டை ஒழித்திட வேண்டும்- டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார்.

இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதை கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
அம்பேத்கர் மேற்கண்ட வகையில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று எங்கேயும் பேசியுள்ளாரா என விவரம் தேடினோம். அவர், இந்திய நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு, சமூக பொருளாதாரம், பெண்கள் முன்னேற்றம் தொடர்பாகப் பேசிய ஆவணங்களை தேடிப் பார்த்தோம். அவற்றில் எங்கேயும் அப்படியான தகவல் காணப்படவில்லை.
Ambedkar Lok Sabha Speech 1 I Ambedkar Lok Sabha Speech 2
Ambedkar Lok Sabha Speech 3 I Ambedkar Lok Sabha Speech 4
அடுத்தப்படியாக, ஜாதி ஒழிப்பு பற்றி அம்பேத்கர் கூறிய கருத்துகளை பற்றி தேடினோம். அவற்றிலும் இத்தகைய தகவல் எதுவும் காணப்படவில்லை.
Annihilation of Caste – B.R.Ambedkar
இதுதவிர, அம்பேத்கர் எழுதிய பல்வேறு கருத்துகள், பேச்சுகள் உள்ளிட்டவற்றை, ஆவணமாக தொகுத்து, மத்திய அரசே அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அவற்றை நீங்கள் கீழ்க்கண்ட லிங்கில் காணலாம். அவற்றில் எங்கேயும் பழங்குடியினப் பெண் இந்திய குடியரசுத் தலைவர் ஆனால், இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடலாம் என்று அம்பேத்கர் எங்கேயும் குறிப்பிடவில்லை.
Dr.B.R.Ambedkar Writings and Speeches – mea.gov.in link
எனவே, அம்பேத்கர் பேசாத ஒன்றை பேசியதுபோல குறிப்பிட்டு, திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் ஆன நிகழ்வை மையப்படுத்தி சிலர் மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பி வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:ஒரு பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவரானால் இட ஒதுக்கீட்டை ஒழிக்கலாம் என்று அம்பேத்கர் கூறினாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False

நானும் எத்தனையோ பாஜக மத்திய அரசு மீதான தவறான தகவல்கள் பகிரப்படுவதை false information report அடித்திருக்கிறேன் ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆனால் பாஜகவினரின் post மட்டும் இது போல் தடுக்கபடுகிறது