எம்வி கங்கா விலாஸ் கப்பலின் புகைப்படம் என்று பகிரப்படும் தவறான படத்தால் சர்ச்சை…

இந்தியா சமூக ஊடகம்

‘’ உலகின் நீளமான ஆற்றுவழி கப்பல் எம்வி கங்கா விலாஸ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த செய்தியை தமிழ்நாடு பாஜக அதிகாரப்பூர்வமாக தயாரித்து உண்மைபோல வெளியிட்டுள்ளது.  

Claim Tweet Link l Archived Link 

உண்மை அறிவோம்:

இந்த செய்தி தொடர்பாக, பாஜக ஆதரவாளர்கள் வெளியிட்ட வேறொரு போஸ்டரையும் காண நேரிட்டது. அதனை கீழே இணைத்துள்ளோம். 

இந்த போஸ்டரில் உள்ள கப்பலின் படம் வேறொன்றாக உள்ளது. அடுத்தப்படியாக, இதுபற்றி ஊடகங்களில் வெளியான செய்தியையும் கீழே இணைத்துள்ளோம். 

Oneindia tamil link 

இதுதொடர்பான வீடியோ செய்தி ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம். 

கூடுதல் ஆதாரத்திற்காக, அமைச்சர் Sarbananda Sonowal வெளியிட்ட பதிவு ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம். 

எனவே, மேற்கண்ட செய்திகள் அனைத்திலும் இடம்பெற்றுள்ள எம்வி கங்கா விலாஸ் கப்பலின் படம் முற்றிலும் வேறொன்றாக இருப்பதை உணரலாம். 

இதையடுத்து, இவர்கள் பகிர்ந்துள்ள கப்பலின் படம் பற்றி தகவல் தேடினோம். அப்போது, இது அமெரிக்காவைச் சேர்ந்த Princess Cruises நிறுவனத்திற்குச் சொந்தமான Regal Princess என்ற சொகுசு கப்பலின் படம் என தெரியவந்தது. 


Regal Princess cruise Wallpaper link 

எனவே, அவசர கதியில் இணயதளத்தில் கிடைத்த வேறொரு கப்பலின் படத்தை டவுன்லோட் செய்து, எம்வி கங்கா விலாஸ் என்று குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:எம்வி கங்கா விலாஸ் கப்பலின் புகைப்படம் என்று பகிரப்படும் தவறான படத்தால் சர்ச்சை…

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply