‘’பெரியார்- மணியம்மை திருமணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

Murugesh Mudhaliyar என்பவர் ஜனவரி 22, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில் பெரியார் முன் பெண் ஒருவர் மாலை அணிந்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பொண்டாட்டிக்கு தாலி கட்டாதே.. அது பெண் அடிமைத்தனம்னு சொல்லி, மகளுக்கு தாலி கட்டிய மகான்தான் நம்ப பெரியார்,’’ என எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படம் உண்மையா என்ற சந்தேகத்தில் அதனை கூகுளில் பதிவேற்றி ஆதாரம் தேடினோம். அப்போது இது தவறான தகவல் என தெரியவந்தது.

இதன்படி, பெரியார் தலைமையில் நிகழ்ந்த சுய மரியாதை திருமண நிகழ்வின் புகைப்படம் ஒன்றை எடுத்து, அதனை தவறான முறையில் எடிட் செய்து வதந்தி பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

மேற்கண்ட புகைப்படத்தில் பெரியார் மற்றும் சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர் மட்டுமின்றி, அண்ணா, கி.வீரமணி உள்ளிட்டோரும் அருகில் அமர்ந்துள்ளதை காண முடிகிறது.

இதுதவிர, உண்மையான மணியம்மை இப்படியிருக்க மாட்டார். அவர் பற்றிய புகைப்படங்களை நிறைய இணையதளத்தில் காண முடியும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பெரியார் – மணியம்மை திருமண புகைப்படம் இதுவா?

Fact Check By: Pankaj Iyer

Result: False