ராமதாஸ் பற்றி சன் நியூஸ் வெளியிட்ட இந்த நியூஸ் கார்டு உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

‘’ராமதாஸ் பற்றி சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு ஒரு வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

இந்தசெய்தியை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி வைத்திருந்தார். இது போலியான தகவல், சிலர் வேண்டுமென்றே இதனை பகிர்ந்து வருவதாக, அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதன்பேரில், இந்த நியூஸ் கார்டை வேறு யாரேனும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனரா என விவரம் தேடினோம். அப்போது நிறைய பேர் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம். 

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3

உண்மை அறிவோம்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளையும் கடந்து, மே 7ம் தேதி முதலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை நீங்கலாக மாநிலம் முழுக்க மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறந்தாலும் கூட்ட நெரிசல் பலரையும் முகம் சுளிக்கச் செய்வதாக இருந்தது. சமூக இடைவெளி இன்றி செயல்பட்ட டாஸ்மாக் கடைகளை குறைந்தபட்சம் மே 17 கொரோனா ஊரடங்கு முடியும் வரையேனும் மூட வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதன்பேரில் டாஸ்மாக் கடைகளை மே 17 வரை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Dinamani news linkArchived Link 

ஆனால், இந்த வழக்கை தொடர்ந்தது யார் என்பதில் பெரிய சந்தேகம் எழுந்தது. இதற்கு கமல்ஹாசன் உரிமை கோர, இதையடுத்து, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் இதற்கு விளக்கம் அளித்திருந்தார். இந்த விவகாரம் மே 8ம் தேதி சமூக ஊடகங்களில் மிக வைரலாக பரவியது. 

Advocate G Rajesh Post Link 1Archived Link 1

இந்த சர்ச்சை சூழலில்தான் ராமதாஸ் ‘’இந்த டாஸ்மாக் மூடல் விவகாரத்திற்கு நாங்கள்தான் காரணம்,’’ என்று கூறியதாக, மேற்கண்ட செய்தி, சன் நியூஸ் பெயரில் பகிரப்பட்டு வருகிறது. 

ஆனால், இது போலியாக தயாரிக்கப்பட்டதாகும். டிவியில் பிரேக்கிங் நியூஸ் ஓடும்போது அதனை யாரோ போட்டோ பிடித்து, எடிட் செய்திருக்கின்றனர். 

இதனை fotoforensics உதவியுடன் பகுப்பாய்வு செய்ததில் எடிட் செய்யப்பட்டதற்கான சாத்தியமே அதிகம் இருந்தது. 

இதையடுத்து, சன் நியூஸ் தொலைக்காட்சி எடிட்டோரியல் பிரிவில் இதுபற்றி விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’இது எடிட் செய்யப்பட்ட தகவல். நாங்கள் இப்படி செய்தி வெளியிடவில்லை,’’ எனக் கூறினர். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான தகவல் என்று உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் எடிட் செய்யப்பட்டது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை காண நேரிட்டால், +91 9049044263 என்ற எங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள். 

Avatar

Title:ராமதாஸ் பற்றி சன் நியூஸ் வெளியிட்ட இந்த நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •