இத்தாலி அதிபர் கண்ணீர் விட்டு அழும் புகைப்படம் உண்மையா?

உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’இத்தாலி அதிபர் கொரோனா வைரஸ் பற்றி கண்ணீர் விட்டு கதறல்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் சில பதிவுகளை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link 

இதே நபர், ஏற்கனவே இந்த புகைப்படத்தை வைத்து வெளியிட்ட மற்றொரு ஃபேஸ்புக் பதிவையும் காண நேரிட்டது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Facebook Claim LinkArchived Link

இதனை மேலும் பலர் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
முதலில் இந்த புகைப்படத்தில் இருப்பவர் இத்தாலி அதிபர்தானா என்ற சந்தேகத்தில் விவரம் தேடினோம். அப்போது, இவர் இத்தாலி அதிபர் இல்லை; பிரேசில் அதிபர் Jair Bolsonaro என தெரியவந்தது. 

இவர் எப்போது இப்படி கண்ணீர் விட்டு அழுதார் என்ற சந்தேகத்தில் விவரம் தேடினோம். அப்போது 2019 டிசம்பரில் அவர் தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றின் விவரம் கிடைத்தது. அதில்தான் அவர் கண்ணீர் விட்டு அழுதபடி பேசுகிறார். அதன் ஸ்கிரின்ஷாட்டை எடுத்து தற்போது இத்தாலியுடன் தொடர்புபடுத்தி பகிர்கிறார்கள் என தெரியவருகிறது. 

இதையடுத்து, இத்தாலியின் அதிபர் யார் என விவரம் தேடினோம். அப்போது அவரது பெயர் Sergio Mattarella என்று தெரியவந்தது. இதேபோல, இத்தாலியின் பிரதமராக Giuseppe Conte என்பவர் உள்ளார். 

இதுதவிர, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் குறிப்பிடுவதுபோல இத்தாலி பிரதமரோ, அதிபரோ கண்ணீர்விட்டு கதறி அழுததாக எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை.

கொரோனா வைரஸ் பற்றி இஷ்டத்திற்கும் கற்பனை செய்துகொண்டு யாரோ ஒருவர் தவறான புகைப்படத்தை வைத்து இப்படி வதந்தி பரப்பியிருக்கலாம். அதனை மற்றவர்களும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு நடத்திய பேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:இத்தாலி அதிபர் கண்ணீர் விட்டு அழும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False