‘’ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் மக்களை கட்டுப்படுத்தும் பணியில் சிங்கங்கள் ஈடுபட்டுள்ளன,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link
Facebook Claim LinkArchived Link

இதேபோல, மேலும் பல ஃபேஸ்புக் பதிவர்கள் தகவல் பகிர்ந்ததை காண நேரிட்டது.

உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் வந்தது முதலாக, வித விதமான வதந்திகள் சீனா உள்ளிட்ட உலக நாடுகளை மையப்படுத்தியும், இந்தியாவை மையப்படுத்தியும் பரவி வருகின்றன. அவை தொடர்பாக, நாமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடிவுகளை சமர்ப்பித்துள்ளோம்.

அந்த வகையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் கூறப்பட்டுள்ள தகவலும் தவறாகும். இப்படி எந்த சம்பவமும் ரஷ்யாவில் நடைபெறவில்லை. இது தென்னாப்ரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டில் நிகழ்ந்ததாகும்.

Mirror News LinkArchived Link

இதுதொடர்பாக, நமது இலங்கை பிரிவு மற்றும் மராத்தி பிரிவினர் ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவுகளை சமர்ப்பித்துள்ளனர்.

Fact Crescendo Srilanka Link Fact Crescendo Marathi Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி தென்னாப்ரிக்காவில் 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது கொரோனாவுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்து வருகின்றனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ரஷ்யாவில் கொரோனா வைரஸ்; மக்களை கட்டுப்படுத்த சிங்கங்கள்? உண்மை இதோ…

Fact Check By: Pankaj Iyer

Result: False