பெரியார் ராமரை செருப்பால் அடித்தார் என்பதை கி.வீரமணி ஒப்புக் கொண்டாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’பெரியார் ராமரை செருப்பால் அடித்தார் என்று கி.வீரமணி ஒப்புக் கொண்டார்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

மாரிதாஸ் காணொளிகள் இந்த வீடியோவை கடந்த ஜனவரி 21ம் தேதியன்று வெளியிட்டுள்ளது. இதில், வீரமணி, ‘’பெரியார் ராமரை செருப்பால் அடித்த பின் திமுகவுக்கு 183 இடங்களில் வெற்றி கிடைத்தது,’’ என்று பேசுகிறார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ரஜினிகாந்த் பற்றியும், பெரியார் பற்றியும் புதுப்புது வதந்திகள் சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாக டிரெண்டிங் ஆகியுள்ளன. அதுபோலத்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பதிவும்.

இது உண்மையில், கி.வீரமணி பேசியதை எடிட் செய்து வெளியிடப்பட்டதாகும். இதனை ரங்கராஜ் பாண்டே அவரது சாணக்யா ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து, அதனை பலரும் உண்மை என நம்பி தற்போது வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

Facebook Claim LinkArchived Link

வீரமணி பற்றி பரவும் இந்த வீடியோவிற்கு பதில் அளித்து, திராவிடர் கழகத்தின் சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பிரின்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ஆதாரத்தை கீழே இணைத்துள்ளோம்.

Archived Link

இந்த வீடியோவில் கி.வீரமணி பேசியதன் முழு காட்சியை காண முடிகிறது. இதில், அவர் பேசியதாவது:

இந்திரா காந்தி ஜலந்தரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, பிராமண பத்திரிகையாளர்கள் சிலர் அவரை சந்தித்து, உங்கள் தமிழக கூட்டணி கட்சியான திமுகவை சேர்ந்த பெரியார், ராமரை தேர்தல் நேரத்தில் செருப்பால் அடித்தார். ஆனால், தமிழக அரசு (திமுக) எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை, என்று முறையிட்டனர்.

இதைக் கேட்ட இந்திரா காந்தி, வாட், வாட், என்ன சொல்றீங்க, you mean Ramasamy Naicker? What did he do? என்று கேட்டார். அதற்கு அந்த பிராமண பத்திரிகையாளர்கள், yes, he beat effigy of Rama with chappals, என்று கூறினர். அதற்கு இந்திரா, is it? Is it a fact? If it’s a fact, it’s not a new thing, he is doing it from 1934 onwards, என்று பதில் அளித்தார்.

இந்திரா காந்திக்கே இந்த விசயம் புரிந்தது. ஆனால், சிலர் அப்போதில் இருந்தே ராமர் விசயத்தை பெரிதுபடுத்தி பேசுகிறார்கள். ராமரை அடிப்பதற்கு முன்பு, திமுகவுக்கு கிடைத்த தேர்தல் வெற்றியை விட, ராமரை அடித்த பின், 183 சீட் திமுகவுக்கு கிடைத்தது. இதுதான் அதிகபட்சமாக திமுக பெற்ற வெற்றி.    

இவ்வாறு வீரமணி பேசுகிறார்.

அதாவது, வீரமணி பேசுவதில் கணிசமான நொடிகளை வெட்டி ஒட்டி, மேற்கண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.

இதன்படி, ‘பெரியார் அடித்ததாக,’ வீரமணி கூறவில்லை; ‘இந்திரா காந்தியிடம் சில பத்திரிகையாளர்கள் இவ்வாறு கேள்வி கேட்டனர்,’ என்றுதான் வீரமணி சொல்கிறார். அவ்வாறு விசயம் நடந்த பிறகும், திமுக 183 இடங்களில் வென்றதாக, கி.வீரமணி குறிப்பிடுகிறார்.   

இதுதவிர, ‘1971ல் சேலத்தில் நடந்த திராவிடர் கழக ஊர்வலத்தில், உறுப்பினர்கள் மீது சிலர் செருப்பை வீச, அவர்கள் அதை எடுத்து உடனடியாக ராமரின் உருவப்படத்தை செருப்பால் அடித்துள்ளனர். பிறகு, ராமரின் உருவபொம்மையை எடுத்து வந்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர். பெரியார் நேரடியாக அடிக்கவில்லை,’ என்பதுதான் திராவிடர் கழக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படும் விசயமாகும்.

இந்த வீடியோ தொடர்பாக, திமுக தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவை கீழே இணைத்துள்ளோம்.

Archived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியில் பகிரப்பட்ட வீடியோ எடிட் செய்து பகிரப்பட்டது என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பதிவில், உண்மையும், பொய்யும் கலந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பெரியார் ராமரை செருப்பால் அடித்தார் என்பதை கி.வீரமணி ஒப்புக் கொண்டாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

1 thought on “பெரியார் ராமரை செருப்பால் அடித்தார் என்பதை கி.வீரமணி ஒப்புக் கொண்டாரா?

  1. Both videos are edited version how could one be orginal and another one a false video.both contain the same thing.one is full video one is promo video.in promo video the highlighted news will only be shown how could it be a false news

Comments are closed.