நடிகை மஞ்சுளா மரணம்: பழைய செய்தியை புதிதுபோல பகிர்ந்த இணையதளம்!

சினிமா தமிழகம்

‘’நடிகை மஞ்சுளா மரணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link 1Mediatimez LinkArchived Link 2

இதே செய்தியை மேலும் பலர் பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது.

உண்மை அறிவோம்:
நடிகை மஞ்சுளா கடந்த 2013ம் ஆண்டு உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றைத்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். 

7 ஆண்டுகள் பழைய செய்தியை தற்போது பகிர்ந்ததோடு, அதற்கு வைத்துள்ள தலைப்புதான் மற்றவர்களை குழப்புவதாக உள்ளது. நடிகை மஞ்சுளா வாழ்க்கை வரலாறு அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய தலைப்பை வைக்காமல், எடுத்த எடுப்பில் ‘கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் மரணம்! கலங்க வைத்த இறுதி நிமிடம். பிரபல நடிகையும், விஜய்குமாரின் மனைவியுமான மஞ்சுளாவின் கண்ணீர் கதை..!,’ என செய்திக்கு தலைப்பிட்டுள்ளனர். 

இதனை பார்த்தால், எதோ தற்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்தது போல, தோன்றுகிறது. பரபரப்பிற்காக இப்படியான அதிரடி செய்திகளை வெளியிடுவது சமீபகாலமாக, தமிழ் ஊடகத்துறையில் வழக்கமாக உள்ளது. அதில் ஒன்றுதான் மேற்கண்ட செய்தியின் தலைப்பு.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியின் தலைப்பு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:நடிகை மஞ்சுளா மரணம்: பழைய செய்தியை புதிதுபோல பகிர்ந்த இணையதளம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •