
சங்கீதாவை திருமணம் செய்து கொண்டாரே தவிர அவரை தன் மனைவி என்று விஜய் கூறவில்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஜோசப் விஜய் அப்பா விளக்கம். சங்கீதாவை கல்யாணம் செய்து கொண்டாரே தவிர அவரை தன் மனைவி என்று சொல்லவில்லை! அதேபோல் திரிஷாவுடன் லிவிங் டொகெதர் வாழ்கிறார் அவரை தன் மனைவி இல்லை என்று சொன்னதில்லை? – பேட்டி ஒன்றில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சங்கீதாவை தன் மனைவி என்று விஜய் சொல்லவில்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் புது விளக்கம் அளித்தது போன்று நியூஸ் கார்டு ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. தகவலும் விஷமத்தனமாக உள்ளது. எனவே, இது போலியானது என்று தெரிந்தது. எனவே, இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
தந்தி டிவி இப்படி ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று இதே புகைப்படங்களுடன் நியூஸ் கார்டு ஒன்றை தந்தி டிவி வெளியிட்டிருந்ததை கண்டோம். ஆனால் அதில், “எனக்கு விஜய் கடனா தரலயே. அக்கவுண்ட் புக்கில் என் அப்பாவுக்கு இவ்வளவு கொடுத்திருக்கிறேன் என்று எழுதியதை தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். உடனே எல்லாரும் அதனை கடன் என தவறாக எழுதி பரப்பி வருகின்றார்கள். 200 கோடி சம்பாதிக்கும் ஒரு பிள்ளை அப்பாவுக்கு ஒரு 5 கோடி கொடுக்க கூடாதா.. அவர் பணம் கொடுத்தேன் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். எங்கேயும் கடனாகக் கொடுத்தேன் என குறிப்பிடவில்லை – பேட்டி ஒன்றில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறாக பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவானது. இது போலியானது என்பதை உறுதி செய்துகொள்ள இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சங்கீதாவை திருமணம் செய்து கொண்டாரே தவிர அவரை தன் மனைவி என்று விஜய் சொல்லவில்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


