
தவெக தலைவர் விஜய் தி.மு.க கருப்பு – சிவப்பு என தி.மு.க கொடியின் நிறத்தில் குடை பிடித்து பிரசாரம் செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தவெக தலைவர் விஜய் கருப்பு சிவப்பு நிற குடையுடன் தேர்தல் பிரசாரம் செய்தது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த படத்தின் மீது, “எவனோ நம்ம பையன் தான் குடையை கொடுத்து இருக்கான்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தேர்தல் பிரசாரத்தின் போது எதிர் தரப்பின் சின்னம், கொடிகளை எந்த வகையிலும் யாரும் பயன்படுத்த மாட்டார்கள். நடிகர் விஜய் தி.மு.க-வின் கொடியை நினைவூட்டும் கருப்பு – சிவப்பு நிறத்திலான குடையை பயன்படுத்தி பிரசாரம் செய்தார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது எடிட் செய்யப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, தவெகவின் கொடியின் நிறத்தில் குடை இருப்பது போன்று புகைப்படங்கள், வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. அப்போது தவெக தொண்டர் ஒருவர் விஜய்க்கு தவெக கொடியின் நிறத்தில் குடையை வழங்கினார் பல பதிவுகள் நமக்கு கிடைத்தன.
தொண்டர் அளித்த குடையுடன் திருவள்ளூரில் ரோடு ஷோ செய்த விஜய் என்று குறிப்பிட்டு பல செய்திகளும் வீடியோக்களும், புகைப்படங்களும் நமக்கு கிடைத்தன. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
கருப்பு – சிவப்பு வண்ண குடையுடன் தேர்தல் பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


