மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா?

Coronavirus அரசியல் இந்தியா சமூக ஊடகம்

நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் நபர் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

2.19 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர். அதில் நிர்வாண கோலத்தில் ஒருவர் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைக்கிறார். அவரை இஸ்லாமியர் ஒருவர் அடித்து துரத்துகிறார். வெளியே செல்ல முயன்ற அவரை பேன்ட் – சர்ட் அணிந்த நபர் ஒருவர் அடித்து அமர வைக்கிறார். 

இந்த பதிவை Rajendra Krishnaswamy என்பவர் 2020 ஏப்ரல் 9ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “18+ பதிவு….. மருத்துவமனையை அலங்கரிக்கும் தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்ட மர்ம நபர்” என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

வீடியோவைப் பார்க்கும்போது அது மருத்துவமனை போல தெரியவில்லை. தரை விரிப்புகள், மிகப்பெரிய ஹால், ஜன்னல் கண்ணாடி எல்லாம் பார்க்கும்போது மண்டபம் போன்ற தோற்றத்தைத் தருகிறது. வீடியோவில் வரும் யாரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. மருத்துவமனைகளில் அனைவரும் மாஸ்க் அணியும் நிலையில், யாரும் மாஸ்க் அணியாதது, மிகப்பெரிய அரங்கம் போன்ற இடம் எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பல காட்சிகளை மாற்றி மாற்றி பதிவேற்றி தேடிய போதும் இந்த வீடியோ பற்றிய தகவல் நமக்கு கிடைக்கவில்லை. கடைசியில், ஒரு வீடியோ கிடைத்தது.

அதில் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குல்ஷன் இ ஹதீத் என்ற மசூதிக்குள் நிர்வாணமாக நுழைந்த நபர் என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது கிடைத்தது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அந்த வீடியோவைப் பார்த்தோம். அதில் சாலையில் ஒருவர் நிர்வாணமாக நடந்து செல்வது முதல், மசூதிக்குள் நுழைந்து தாக்குதல் வரை அனைத்தும் இருந்தது. இதன் 19வது விநாடியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவின் காட்சிகள் தொடங்கின. 

Search LinkYoutube Link

இதன் மூலம் இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது இல்லை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. இது பாகிஸ்தானில்தான் எடுக்கப்பட்டதா என்பதை அறிய ஆய்வு மேற்கொண்டோம். அந்த யூடியூப் வீடியோவில் குறிப்பிட்ட தகவலை கூகுளில் டைப் செய்து தேடினோம்.

அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் உள்பட பல உண்மை கண்டறியும் ஊடகங்கள் இந்த வீடியோ தொடர்பான உண்மை கண்டறியும் ஆய்வை மேற்கொண்டிருப்பதை காண முடிந்தது.

malayalam.factcrescendo.com

அந்த வீடியோவில் உள்ள உருது வார்த்தைகளை கூகுளில் காப்பி பேஸ்ட் செய்து தேடியபோது இது தொடர்பான பல வீடியோக்கள் மற்றும் செய்திகள் நமக்கு கிடைத்தன. செய்தியைப் பார்த்தபோது, முன்னாள் போலீஸ் அதிகாரியின் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் மசூதிக்குள் நுழைந்து தாக்கியதாகவும், அவரை போலீசார் கைது செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். 

urdupoint.comArchived Link

இதன் மூலம் கடந்த ஆண்டு பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோவை எடுத்து, டெல்லியில் நடந்த தவ்ஹித் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்ற நபர் என்று விஷமத்தனமான தகவலை சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •