
‘‘நாடார் சங்கத்தில் கிறிஸ்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை,’’ என்று திமுக மூத்த தலைவர் அப்பாவு கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ வேதனை! நாடார் சங்கத்தில் இந்து நாடார்கள் மற்றும் சானாதானிகள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவது வேதனைக்குரியது. கிறிஸ்தவ நாடார்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை- அப்பாவு திமுக,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது போலியானது, என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக, News 7 Tamil ஆசிரியர் குழு மற்றும் திமுக ஐடி பிரிவு ஆகியோரிடம் பேசி, இது உண்மையல்ல, என்று உறுதிப்படுத்தியுள்ளோம்.
மேலும், News 7 Tamil ஊடகம் இதுபற்றி மறுப்பு வெளியிட்டும் உள்ளது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


