
‘’ வலைப்பேச்சு அந்தணன் மரணம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இந்த பதிவில், ‘’ YouTuber வலைப்பேச்சு அந்தணன் இன்று மாலை 4 மணி அளவில் வீதியில் சென்று கொண்டிருக்கும் போது லாரி மோதி இறந்து விட்டார்
அவரின் பாவங்களை மன்னிப்போம் மறப்போம்…!’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று தகவல் தேடினோம். அப்போது இதுபோன்றே மேலும் சில பதிவுகள் பகிரப்பட்டிருந்ததையும் கண்டோம்.
இதன்படி, சமீபத்தில் யூ டியுப் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்தணன், நடிகர் அஜித் பற்றி தவறாகப் பேசியதாகக் குறிப்பிட்டு, அவரது ரசிகர்கள் மேற்கண்ட வகையில் தொடர்ச்சியாக, அவர் பற்றி வதந்தி பரப்புவதாக, தெரியவருகிறது.
ஆனால், அந்தணன் நலமாகவே உள்ளார். இதுபற்றி அவர் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
எனவே, தனிப்பட்ட காரணத்திற்காக, அஜித் ரசிகர்கள் என்று கூறிக் கொண்டு சிலர் வேண்டுமென்றே வலைப்பேச்சு அந்தணன் பற்றி வதந்தி பரப்புவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘வலைப்பேச்சு அந்தணன் மரணம்’ என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…
Written By: Fact Crescendo TeamResult: False
