காக்ரோச் ஜனதா கட்சி செய்தியாளர் சந்திப்பில் அன்னா ஹசாரே இருந்தாரா?

Altered அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘‘காக்ரோச் ஜனதா கட்சி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அன்னா ஹசாரே’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ காக்ரோச் ஜனதா கட்சி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அன்னா ஹசாரே’’, என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது வேண்டுமென்றே எடிட் செய்து, பகிரப்படும் புகைப்படம், என்று தெரியவந்தது. 

இதன்படி, Cockroach Janata Party (CJP) செய்தித் தொடர்பாளர் ashutosh_ranka உண்மையான புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அன்னா ஹசாரே கிடையாது. 

இதேபோன்று Cockroach Janata Party (CJP) செய்தியாளர் சந்திப்பு பற்றிய முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

The Tribune l The Print

மேலும், குறிப்பிட்ட புகைப்படத்தை Sight Engine Tool, wasitai, resemble.ai போன்ற AI சரிபார்ப்பு இணையதளங்கள் உதவியுடன் ஆய்வு செய்தோம். அப்போது, இது AI மூலமாக தயாரிக்கப்பட்ட புகைப்படம் என்று தெளிவானது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: காக்ரோச் ஜனதா கட்சி செய்தியாளர் சந்திப்பில் அன்னா ஹசாரே இருந்தாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: Altered

Leave a Reply