“விஜய நெனச்சா தான் பயமா இருக்குது” என்று ஸ்டாலின் புலம்புவதாக பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

விஜய நெனச்சா தான் பயமா இருக்குது என்று ஸ்டாலின் புலம்பி வருகிறார் என்று சன் நியூஸ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விஜய நெனச்சா தான் பயமா இருக்குது. விஜய்க்கு இருக்கும் மக்கள் ஆதரவை பார்த்தால் தான் பீதியாக உள்ளது என்று ஸ்டாலின் தனக்கு நெருக்கிய வட்டாரத்திலே புலம்புகிறாராம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க ஆதரவு ஊடகமான சன் நியூஸ் தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் நியூஸ் கார்டு வெளியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நியூஸ் கார்டை இன்றைய சூழலில் சன் நியூஸ் வெளியிட வாய்ப்பில்லை. மேலும் பேச்சு வழக்கில் தகவல் உள்ளது. நெருங்கிய என்பதற்குப் பதில் நெருக்கிய என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்கின்றன.

ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வை தொடர்ந்தோம். முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை சன் நியூஸ் மார்ச் 3, 2026 அன்று வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். மார்ச் 3ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டையும் சன் நியூஸ் வெளியிடவில்லை என்பது தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள இந்த நியூஸ் கார்டை சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது, சன் நியூஸ் வெளியிடவில்லை என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

“விஜய்யை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது” என்று ஸ்டாலின் புலம்புவதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“விஜய நெனச்சா தான் பயமா இருக்குது” என்று ஸ்டாலின் புலம்புவதாக பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply