FACT CHECK: கொரோனா வைரஸ் கிருமியை உருவாக்கிய நிறுவனம்தான் தடுப்பூசியும் தயாரித்ததா?

சமூக ஊடகம் சர்வதேசம் மருத்துவம் I Medical

சீனாவின் வூகானில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்தை நடத்தி வரும் மருந்து தயாரிப்பு நிறுவனம்தான் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மாதிரி படங்களை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எல்லாமே_தற்செயலாக……… சீனாவின் Wuhan (வுஹான்) மாகாணத்தில் உள்ள உயிரியல் ஆய்வகம் Glaxo நிறுவத்துக்கு சொந்தமானது. தற்செயலாக, இவர்கள்தான் Pfizer (ஃபைசர்) நிறுவத்திற்கும் உரிமையாளர்கள். ற்போது கொரோனா தடுப்பூசி தயாரிப்பவர்களில் முக்கியமானர்கள் இவர்களே.

இது, தற்செயலாக, (பிளாக் ராக்) Black Rock நிறுவநிதிகளின் ட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. தற்செயலாக, Open Foundation Company (ஓப்பன் அறக்கட்டளை நிறுவன) என்ற‌ SOROS FOUNDATION நிதிகளை நிர்வகிப்பவர்கள் இவர்களேஇது, தற்செயலாக பிரெஞ்சு AXA நிறுவத்துக்கு சேவை செய்கிறது

தற்செயலாக, இவர்கள் ஜேர்மன் நிறுவனமான Winterthur-க்கு சொந்தமானவர்…. தற்செயல் நிகழ்வாகவுஹானில் சீன ஆய்வகத்தை கட்டியவர்கள் இதே Winterthur நிறுவமேதற்செயலாக இவர்களே சிலஆண்டுகளுக்குமுன் German Alkianz (ஜெர்மன் அலையன்ஸ்) நிறுவத்தை அவமாகவாங்கினர்இது, தற்செயலாக Vanguard (வான்கார்ட்) நிறுவத்தை முக்கியபங்குதாரராகக் கொண்டுள்ளது. இந்த‌ Vanguard (வான்கார்ட்) நிறுவமே முன்னர் சொன்ன‌ Black Rock (பிளாக் ராக்) நிறுவத்தின் முக்கியபங்குதாரர்கள்.

இந்த  Black Rock-தான் ர்வதேசத்தின் மத்திய வங்கிகளைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் உலக நிதி முதலீட்டு மூலதனத்தின் ட்டுப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியை ன் ம் வைத்திருக்கிறது. இவர்கள் தற்செயலாக, Microsoft (மைக்ரோசாஃப்ட்) நிறுவத்தின் முக்கிய பங்குதாரர்களுள் ஒருவர்.

மைக்ரோசாஃட் நிறுவமோ Bill Gates (பில் கேட்ஸ்) சொத்து. அவர் PFIZER-ன் முக்கியபங்குதாரராகவும் இருப்பது ற்றுமொரு ற்செயல் நிகழ்வு. இதில் ற்செயலானஅதிசயம் என்னவென்றால், இதே Pfizer-தான் கோவிட் டுப்பூசியை உலகெங்கும் யாரித்து விற்க காண்ட்ராக்ட் போட்டு ருகிறது. மேலும் இவர்களே தற்போது WHO-ன் (உலசுகாதாரநிறுவம்) முக்கியஸ்பான்சராகவும் இருக்கிறார்கள்

ம்புங்க‌…! இது எல்லாமே ற்செயல் நிகழ்வுகள்தான். கொரோனா மூலம் உயிர் ம் உருவாக்கி, அதை காரம் காட்டி உலபெரும் க்காரகார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கஇறங்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Vetri Kondan என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 டிசம்பர் 10 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா கோவிட் 19 வைரஸ் சீனாவில் 2019 டிசம்பர் இறுதியில் வெளிப்பட்டது. 2020ம் ஆண்டு முழுவதையும் கொரோனா வைரஸ் ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதன் பாதிப்பிலிருந்து வெளிவர முடியாமல் உலக நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த வைரஸ் கிருமி சீனாவின் வூகானில் கண்டறியப்பட்டது.

அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive

எனவே, வூகானில் உள்ள வூகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியில்தான் இந்த வைரஸ் கிருமி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆய்வு மையத்தை சீன அரசு நடத்துகிறது. எனவே, சீன அரசுதான் திட்டமிட்டு கிருமியை உருவாக்கியுள்ளது என்று பலரும் கூறி வந்தனர்.

இந்த நிலையில், வைரஸ் கிருமியை உருவாக்கியதும் தற்போது தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ள நிறுவனமும் கிளாஸோ (Glaxo) என்ற நிறுவனத்துக்கு சொந்தமானவை என்ற வகையில் பதிவிடப்பட்டுள்ளது. 

பல நிறுவனங்களைக் குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்குமான தொடர்பை நிரூபிப்பதை விட, கொரோனா வைரஸ் உருவானதாக வதந்தி பரப்பப்படும் வூகான் வைராலஜி நிறுவனமும் தடுப்பூசியைத் தயாரித்துள்ள ஃபைசர் நிறுவனமும் கிளாஸோ நிறுவனத்துக்கு சொந்தமானதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

முதலில் வூகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி யாருக்கு சொந்தமானது என்று பார்த்தோம். அந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்தை பார்த்தோம். அப்போது, இதை சீன அரசு தொடங்கியதாகவும், சீன அரசு நிதி உதவியோடு செயல்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து தனியாருக்கு இதில் பங்கு ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம்.

அப்போது இது அரசு நிறுவனம் என்று அந்த நிறுவனம் அளித்த விளக்கம் ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், இதை தொடங்கியது சீன அரசு என்றும், நிறுவனத்தின் செலவில் பாதியை அரசு ஒதுக்குகிறது என்றும், மீதியை அறிவுசார் சொத்து பரிமாற்றத்தின் மூலம் நிறுவனமே பெறுகிறது என்றும் கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம் வூகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியின் உரிமையாளர் கிளாஸோ நிறுவனம் என்ற தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: whiov.cas.cn I Archive 1 I ft.com I Archive 2

அடுத்ததாக கிளாஸோ நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் ஃபைசர் மருந்து தயாரிப்பு நிறுவனமா என்று ஆய்வு செய்தோம். இரண்டும் தனித் தனி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் என்பதும், இருவருக்கும் இருந்த கூட்டுறவு 2019ம் ஆண்டு முறிந்தது என்றும் தெரியவந்தது. 

அசல் பதிவைக் காண: pfizer.com I Archive 1 I uk.reuters.com I Archive 2 

ஃபைசர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார், யார் என்று பார்த்தோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள பிளாக் ராக் நிறுவனம் கூட ஃபைசர் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பது தெரிந்தது. ஆனால், பிளாக் ராக் வெறும் ஏழு சதவிகித பங்குகளையே வைத்துள்ளது. இதைக் காட்டிலும் அதிக பங்குகள் வைத்துள்ள நிறுவனங்கள் எல்லாம் பங்குதாரராக இருப்பதும் தெரிந்தது. ஆனால், கிளாஸோ நிறுவனத்துக்கு ஃபைசரில் பங்குகள் இல்லை. இதன் மூலம் கோவிட் 19 தடுப்பூசியை தயாரித்த ஃபைசர் நிறுவனத்தை கிளாஸோ நிறுவனம் நடத்துகிறது என்ற தகவல் தவறானது என்பதும் உறுதியானது.

அசல் பதிவைக் காண: money.cnn.com I Archive 1 I uk.reuters.com I Archive 2

நம்முடைய ஆய்வில்,

வூகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி என்பது சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மருந்தைக் கண்டுபிடித்த அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் என்பது இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிளாஸோ நிறுவனத்துக்கு சொந்தமானது இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

ஃபைசர் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் பட்டியலில் கிளாஸோ இல்லை என்பது தெரியவந்துள்ளது.

கிளாஸாவுடனான தொழில் கூட்டுறவை முறித்துக்கொள்வதாக 2019ம் ஆண்டு ஃபைசர் அறிவித்திருப்பது நமக்கு கிடைத்துள்ளது.

இதன் மூலம் கொரோனா வைரஸ் கிருமியை உருவாக்கியதும், தடுப்பூசியை அறிமுகம் செய்ததும் ஒரே நிறுவனம்தான் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வூகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ஃபைசர் நிறுவனமும் ஒரே உரிமையாளருடையது என்பது பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கொரோனா வைரஸ் கிருமியை உருவாக்கிய நிறுவனம்தான் தடுப்பூசியும் தயாரித்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False