‘’ கங்கனா ரனாவத் கன்னத்தில் பதிந்த காங்கிரஸ் சின்னம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Claim Link

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’கங்கனா கன்னம்

காங்கிரஸ் சின்னம்

அடடே

கவிதை, கவிதை.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மக்களவைத் தேர்தல் 2024 முடிவடைந்துள்ளது. இதில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பாக, ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்டி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார்.

ஜூன் 6, 2024 அன்று கங்கனா சண்டிகார் விமான நிலையம் சென்றபோது அங்கு பணியில் இருந்த CISF Constable குல்விந்தர் கவுர், கங்கனாவை முகத்தில் அடித்ததாகக் கூறப்படுகிறது.

Indian Express l Times of India

இதனையடுத்து, ‘கங்கனா ரனாவத் கன்னத்தில் பதிந்த காங்கிரஸ் சின்னம்’ என்று கூறி மேற்கண்ட புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இது கங்கனா முகம் கிடையாது.

இந்த சம்பவம் நடந்த உடனேயே இதுபற்றி விளக்கம் அளித்து, கங்கனா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவரது முகத்தில் காயம் அல்லது அடிபட்ட தழும்பு எதுவும் இல்லை.

அவரது ட்விட்டர் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், கங்கனாவின் உண்மையான முகத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

இறுதியாக, குறிப்பிட்ட புகைப்படம் பற்றிய விவரம் தேடினோம். அப்போது, adsoftheworld மற்றும் coolmarketingthoughts உள்ளிட்ட இணையதளங்களில் இந்த புகைப்படம் இருந்ததைக் கண்டோம். கடந்த 2006ம் ஆண்டு Baygon என்ற கொசு மருந்து விற்பனை தொடர்பாக எடுக்கப்பட்ட விளம்பர படம் இது என்றும் தெரியவந்தது.

எனவே, 2006ம் ஆண்டு வெளியான கொசு மருந்து விளம்பரப் படம் ஒன்றை எடுத்து, கன்னத்தில் அடிவாங்கிய கங்கனா ரனாவத் என்று கூறி, வதந்தி பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘கங்கனா ரனாவத் கன்னத்தில் பதிந்த காங்கிரஸ் சின்னம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: Insight