அம்பேத்கர் உருவப் படம் கொண்ட டிசர்ட்டை ஜாக்கி அணிந்து, போஸ் கொடுப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

இதனை ஃபேஸ்புக்கிலும் பலர் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தை நாம் கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது பல ஆண்டுகளாக இணையத்தில் சுற்றில் உள்ள புகைப்படம் என தெரியவந்தது.

ஆம். ஜாக்கி சானின் வெள்ளை நிற பனியன் அணிந்த இந்த புகைப்படத்தை எடுத்து, பலரும் அவரவர் விருப்பம்போல, அதில், யாரேனும் பிரபலமானவரின் புகைப்படத்தை சேர்த்து, எடிட் செய்த பகிர்ந்து வருகின்றனர்.

உதாரணமாக, முதலில் ஜாக்கிசான் ஒரு Gintama ரசிகர் எனக் கூறப்பட்ட பதிவை கீழே இணைத்துள்ளோம்.

அடுத்தப்படியாக, சிலர் அவரை மைக்கேல் ஜாக்சன் உருவப்படம் அணிந்ததாகக் கூறி தகவல் பகிர்ந்திருக்கின்றனர்.

fanpop.com link I youtube video link

இந்த ஜாக்சன் உருவப்படம் கொண்ட டிசர்ட் உண்மை போலவே இருந்தாலும், இதேபோல மற்றொரு புகைப்படத்தையும் காண நேரிட்டது.

pinterest link

எனவே, ஜாக்கி சான், மைக்கேல் ஜாக்சன் உருவப்படம் கொண்ட டிசர்ட் அணிந்தார் என்ற தகவலும் நம்பகமானதாக தெரியவில்லை.

இதேபோல, அவர் சல்மான் கான் உருவப்படம் கொண்ட டிசர்ட் அணிந்ததாக மற்றொரு தகவல் பகிரப்படுவதையும் கண்டோம். அதுவும் நம்பகமானது இல்லை.

youtube link

youtube video link

ஆனால், இதுவும் நம்பகமானது இல்லை. இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது.

mytelangana link I oneindia tamil link

இறுதியாக, இதேபோன்று வெள்ளை பனியன் அணிந்தபடி, மைக்கேல் ஜாக்சன் புகைப்படத்தின் அருகே ஜாக்கி சான் நிற்கும் புகைப்படம் ஒன்றையும் கண்டோம். அதனையும் ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.

ஆனால் இதில், எந்த உருவப்படமும் அச்சிடப்படவில்லை.

pinterest link I cartasparamichael.blogspot link

எனவே, வெள்ளை நிற பனியன் அணிந்தபடி ஜாக்கி சான் நிற்கும் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதுதவிர, அவரது டிசர்ட்டில் உருவப்படம் எதுவும் அச்சிடப்பட்டதா என்பதற்கான உறுதிகரமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக, ஜாக்கி சானின் இந்த டிசர்ட் புகைப்படத்தை வைத்து, அவர் சல்மான் கான் ரசிகர், ரஜினி ரசிகர் என்றெல்லாம் வித விதமான தகவல்களை பரப்புகிறார்கள் என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:அம்பேத்கர் உருவப்படம் அச்சிட்ட பனியனை அணிந்தாரா ஜாக்கி சான்?

Fact Check By: Pankaj Iyer

Result: Altered