வருகிற 2024ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமராக மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றுவார் என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

செய்தியாளர் செந்தில் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், "2024 ஆகஸ்ட் 15 சுதந்திரதின நாளில் செங்கோட்டையில் கொடியேற்று வார், வருங்கால இந்திய ஒன்றிய பிரதமர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. Mark my Tweet" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், "இது நடக்கா விட்டால் இவனை போன்ற முன் களப்பிணியாளர்கள் தூக்கிட்டு சாவான் MARK MY WORDS" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Ravi Narayan என்பவர் 2021 ஆகஸ்ட் 16ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

செய்தியாளர் செந்தில் வேல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2024ம் ஆண்டு பிரதமராக இந்திய தேசியக் கொடியை ஏற்றுவார் என்று கூறியதாக சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். தி.மு.க-வினர் இதை ஆதரவாகவும், பா.ஜ.க-வினர் இதை எதிர்ப்பாகவும் பகிர்ந்து வருவதை காண முடிந்தது. இந்த ட்வீட் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Facebook

இந்த பதிவு உண்மையானதா என்பதை அறிய முதலில் செந்தில் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். ஆனால் அதில் அந்த பதிவு இல்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்டை நன்கு கவனித்த போது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ட்விட்டர் அட்ரஸில் கூடுதலாக ஒரு ‘எல்’ சேர்க்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதன் அடிப்படையில் @Senthillvel79 என டைப் செய்து தேடினோம். அப்போது செந்தில் பெயரில் போலியான உருவாக்கப்பட்ட பக்கம் நமக்கு கிடைத்தது.

செய்தியாளர் செந்திலின் ட்விட்டர் அக்கவுண்ட் முகவரி @Senthilvel79 என்பதாகும். இதில் செந்தில் என்பதன் ஆங்கில எழுத்தில் கூடுதலாக ஒரு ‘எல்’ மட்டும் சேர்த்து @Senthillvel79 என்ற முகவரியில் போலியாக ட்விட்டர் அக்கவுண்ட்டை தொடங்கியுள்ளனர். அதில் செய்தியாளர் செந்தில் ட்விட்டர் பக்கத்தில் உள்ளது போலவே ப்ரொஃபைல் புகைப்படம், கவர் புகைப்படங்களை எடுத்து பயன்படுத்தி, பார்க்க உண்மையானது போல வைத்துள்ளனர்.

Archive

அந்த போலியான அக்கவுண்டில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ட்வீட் இருந்தது. இதைத்தான் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகிறார்கள் என்பது உறுதியானது. மேலும் ட்விட்டர் அக்கவுண்ட்டின் சுய விவர குறிப்பில் "sarcasm" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதன் அடிப்படையில் "2024 ஆகஸ்ட் 15 சுதந்திரதின நாளில் செங்கோட்டையில் கொடியேற்று வார், வருங்கால இந்திய ஒன்றிய பிரதமர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.." என்று செய்தியாளர் செந்தில் ட்வீட் வெளியிட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

செங்கோட்டையில் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றுவார் என்று செய்தியாளர் செந்தில் கூறியதாக பரவும் ட்வீட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:2024ம் ஆண்டு செங்கோட்டையில் ஸ்டாலின் கொடியேற்றுவார் என செந்தில்வேல் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False