FactCheck: தென்னிந்திய நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தியால் பரபரப்பு!

அரசியல் சமூகம் தமிழ்நாடு

‘’நடிகர் சித்தார்த் இறந்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

வாசகர் ஒருவர் இந்த ஸ்கிரின்ஷாட்டை, +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார்.

இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் பலரும் இந்த தகவலை பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link Archived Link 
Twitter Claim LinkArchived Link 

உண்மை அறிவோம்:
நடிகர் சித்தார்த், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அத்துடன், சர்ச்சைக்குரிய வகையில், மோடி மற்றும் பாஜகவினரை தொடர்ச்சியாக விமர்சித்து, அவர் ட்விட்டரில் தொடர்ந்து தகவல் பகிர்ந்தும் வருகிறார். அதற்காக, அவருக்கு கொலை மிரட்டல் கூட விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில்தான் மேற்கண்ட தகவலை சிலர் மொட்டையாக பகிர்ந்து, வேண்டுமென்றே அவரது ரசிகர்களை குழப்பி வருகின்றனர். உண்மையில், இறந்தவர் தென்னிந்திய சினிமா நடிகர் சித்தார்த் அல்ல. அவர், பாலிவுட் படங்கள் மற்றும் இந்தி டிவி சீரியல்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா ஆவார்.

ஆனால், உண்மை தெரிந்துமே சிலர், தென்னிந்திய நடிகர் சித்தார்த் பற்றி வதந்தி பரப்புவதை தொடர்ந்து செய்துவருகின்றனர்.

அதேசமயம், இதுபோன்ற வதந்திகள், வருத்தம் அளிப்பதாக உள்ளதென்று, நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கருத்து பகிர்ந்துள்ளார்.

Archived Link

எனவே, உள்நோக்கத்துடன் பகிரப்படும் இந்த தகவல், சமூக வலைதள பயனாளர்களை குழப்புவதாக உள்ளதென்று முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:தென்னிந்திய நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தியால் பரபரப்பு!

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply