
‘‘தவெக ஆட்சியில் தமிழகம் நாசமாவது உறுதி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ கூத்தாடி ஆட்சியில் தமிழகம் நாசமாவது உறுதி. எவனாச்சும் ஓட்டு கேட்டு வந்த அவ்வளவுதான். நாசமா போயிடுவடா… பெண்கள் சாபம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது முந்தைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட வீடியோ, என்று தெரியவந்தது. ஏனெனில், அதில் முன்னாள் அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் படம் இடம்பெற்றுள்ளது. ஆனால், தற்போது அவர் எம்.எல்.ஏ., கூட கிடையாது.

இதன்படி, கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் தவெக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. ஆனால், அதற்கு முன்பாக, ஏப்ரல் 20, 2026 அன்று சிவகங்கை மாவட்டம் காப்பாரபட்டியில் ஐயனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தும், போலீசார் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மறியல் போராட்டம் நடந்தது. பொதுமக்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு, அப்போதைய அமைச்சர் பெரிய கருப்பன்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதுதொடர்பான வீடியோவை எடுத்து, தற்போது புதியது போன்று பரப்புகிறார்கள்.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
எனவே, திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோவை எடுத்து, தவெக ஆட்சியுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


