
‘’அசைவம் சாப்பிடுவோரின் ஓட்டுகள் வேண்டாம் – யோகி ஆதித்யநாத்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, 2 வாரங்கள் முன்பாக, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய முழு விவரத்தை கீழே இணைத்துள்ளோம்.
இந்த பிரசாரத்தின்போது, அவர் எங்கேயும் அசைவம் சாப்பிடாதவர்கள் இந்துக்கள் அல்ல, அவர்களின் ஓட்டு பாஜக.,வுக்கு தேவையில்லை என்று பேசவே இல்லை.
அப்படி அவர் பேசியிருந்தால், அது மிகப்பெரிய விவாதமாக மாறியிருக்கும். ஆனால், அவரது வருகையை முன்னிட்டு, கோவையில் பாஜக ஆதரவாளர்கள் நடத்திய வாகனப் பேரணியில் வன்முறை வெடித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. அது பற்றியும் ஊடகங்களில் அப்போது செய்தி வெளியாகியுள்ளது.
அதேசமயம், யோகி ஆதித்யநாத் தமிழ்நாடு வந்ததை தொடர்ந்து, ஏராளமான வதந்திகள் சமூக ஊடகங்களில் நாள்தோறும் பரவி வருகின்றன. அவை பற்றி நாமும் தொடர்ச்சியாக, ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டுள்ளோம்.
இந்த வரிசையில் பகிரப்பட்டு வரும் மற்றொரு வதந்தியே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவலும். இது வதந்தி என்பதை உறுதி செய்வதற்கு போதுமான வீடியோ, செய்தி ஆதாரங்களும் நமக்கு கிடைத்துள்ளன.
இது மட்டுமின்றி, கூடுதல் ஆதாரத்திற்காக, பாஜக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ‘’இப்படி யோகி ஆதித்யநாத் பேசவில்லை. இது தவறான தகவல்,’’ என்று தெரிவித்தார்.
எனவே, யோகி ஆதித்யநாத் பேசாததை, பேசியது போல திரித்து, சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவை மையமாக வைத்து, சமூக வலைதளங்களில் இந்த வதந்தியை பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அசைவம் சாப்பிடுவோரின் ஓட்டு வேண்டாம் என்று கோவையில் யோகி ஆதித்யநாத் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
