கத்தார் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரியின் பதிலடி என்று பகிரப்படும் வதந்தி…
‘’Bycott ஹேஷ்டேக் விவகாரத்தில் கத்தார் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரியன் பதிலடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link I Archived Link
வாசுதேவ் என்பவர் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தை புறக்கணிப்பதாக, வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் சிஇஓ நேரடியாக ஒரு Spoof வீடியோவை அல் ஜசீரா டிவி உதவியுடன் வெளியிட்டுள்ளார் என்று இந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில், நபிகள் நாயகத்தை விமர்சனம் செய்து, பாஜக.,வைச் சேர்ந்த Nupur Sharma மற்றும் Navin Jindal போன்றோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தனர். இதன்பேரில், அவர்களுக்கும், பாஜக மற்றும் இந்திய அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் குவைத், கத்தார் போன்ற அரபு முஸ்லீம் நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
இதையொட்டி பல்வேறு வகையிலான கருத்து மோதல் சமூக வலைதளங்களில் ஏற்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், Vashudev என்ற ட்விட்டர் பயனாளர் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியர்களை பணிநீக்கம் செய்வதாகக் குற்றம் சாட்டி, அதன் வர்த்தகப் பணிகளை புறக்கணிப்பதாகக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதன்பேரில், ByCott Qatar Airways என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. பலரும் இதன்கீழ் ட்வீட் வெளியிட, மற்றொரு தரப்போ, Boycott என்று கூட எழுத தெரியாமல், இப்படி எழுத்துப் பிழையுடன் அரபு நாடுகளுடன் பாஜக ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபடுவதாகக் கேலி செய்தும் வருகின்றனர்.
இதையொட்டி, ட்விட்டர் பயனாளர் ஒருவர் வாசுதேவ்க்கு பதிலடி அளித்து, கத்தார் ஏர்வேஸ் சிஇஓ பேட்டி வழங்கினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து, அவரது டிவி நேர்காணல் ஒன்றை எடுத்து, குரலை மட்டும் மாற்றி கேலி செய்யும் நோக்கில் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
ஆனால், அவரது வீடியோ பலரால் ரிப்போர்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த ட்விட்டர் ஐடி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
https://twitter.com/AhadunAhad11111/status/1534081319470256128?ref_src=twsrc%5Etfw
The Indian Express Link I Scroll.in Link
இந்த வீடியோவை பலரும் உண்மை என நம்பி, வைரலாகப் பகிர தொடங்கியுள்ளனர். குறிப்பாக, கங்கனா ரணாவத் போன்றோர் வெளியிட்ட பதிவுகள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன. பின்னர், கங்கனா தனது பதிவை நீக்கிவிட்டார்.
அதேசமயம், இன்னமும் பலர் இந்த வீடியோவை உண்மையாகவே கத்தார் ஏர்வேஸ் சிஇஓ அளித்த பேட்டி எனக் குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர். உண்மையில், கத்தார் ஏர்வேஸ் சிஇஓ இப்படி எந்த பேட்டியும் வழங்கவில்லை.
அவர் அல் ஜசீரா டிவிக்கு அளித்த உண்மையான நேர்காணல் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதனை எடிட் செய்தே, மேற்கண்ட வகையில், சிலர் தகவல் பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:கத்தார் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரியின் பதிலடி என்று பகிரப்படும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: Misleading