‘டீ கேட்டால் காஃபி; நடுவானில் முதியவர் வாக்குவாதம்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’டீ கேட்டால் காஃபி; நடுவானில் முதியவர் வாக்குவாதம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Claim Link l Archived Link 

இதில், ‘’ ஒன்னும் இல்ல டீ கேட்டதுக்கு காஃபி கொடுத்துட்டாங்கலாம் 😯😯😂’’ என்று எழுதப்பட்டுள்ளது.  

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வீடியோவின் ஃப்ரேம்களை பிரித்தெடுத்து, கூகுள் உதவியுடன் விவரம் தேடினோம். இதே வீடியோ ’Fly High Institute’ என்ற யூடியூப் சேனல் பக்கத்தில் கடந்த ஜனவரி 15, 2024 அன்று பதிவிடப்பட்டதாக, தெரியவந்தது. 

இதுபோன்று நிறைய வீடியோக்கள் அந்த சேனலில் உள்ளன. அத்துடன், குறிப்பிட்ட வீடியோவில் உள்ள முதியவர் அந்த சேனல் பகிர்ந்துள்ள வீடியோக்கள் பலவற்றிலும் இடம்பெற்றுள்ளார். 

இதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ‘Fly High Institute‘ எனும் விமானத்தில் பணிபுரிவோருக்கான பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையம், தங்களது யூ டியுப் பக்கத்தில் பகிர்ந்த விமான ஊழியர்களுக்கான பயற்சி வீடியோ ஒன்றை, உண்மை என தவறாகப் புரிந்துகொண்டு, சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  

ஏற்கனவே நமது இலங்கைப் பிரிவு இதுபற்றி விரிவான ஃபேக்ட்செக் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி ‘தவறானது’ என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘டீ கேட்டால் காஃபி; நடுவானில் முதியவர் வாக்குவாதம்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team 

Result: Misleading

Leave a Reply